Sputnik-V : ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு ஒப்புதல்

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பதற்காக சீரம் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

  • Share this:
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உள்நாட்டில் இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிப்பதற்காக சீரம் நிறுவனம் அண்மையில் அனுமதி கோரியிருந்தது.

இதைத்தொடர்ந்து, சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு செய்யும் பணி . மகாராஷ்டிர மாநிலம் ஹதப்சார் மையத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். நாடு தழுவிய அளவில் தடுப்பூசி திட்டப் பணிகள் குறித்து பிரதமர் ஆய்வு நடத்தினார். இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது தடுப்பூசி இருப்பு, உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும், தடுப்பூசி கிடைப்பது குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து வருவதாகவும், மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க உரிய அறிவிப்புகளை வெளியிடுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி வீணாவது அதிகளவில் இருப்பதாக வேதன தெரிவித்தார், இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். தடுப்பூசி தயாரிப்பாளர்கள் உற்பத்தி மையங்களை அதிகளவு உருவாக்க தேவையான உதவிகளை அரசு வழங்கி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி சென்னை வந்தது. தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், மாநில அரசின் நேரடி கொள்முதல் வாயிலாகவும் ஒரு கோடியே ஒரு லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், சுமார் 94 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்த 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள், தேனாம்பேட்டையில் உள்ள மாநில அரசின் கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டு மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன. இதனிடையே, தடுப்புசிகளின் கையிருப்பு நிலையினை கருத்தில் கொண்டு திருச்சியில் இன்று தடுப்பூசி முகாம்கள் தற்காலிகமாக ரத்துசெய்யப்படுவதாக ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். இதேபோன்று கோவையில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று மாநகராட்சி ஆணையர் குமரவேல் தெரிவித்துள்ளார்.

Must Read : 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? : சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை

இந்நிலையில், தமிழகத்தில் ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை கோவை மாவட்டத்தில் தான் அதிகமாக உள்ளது. அங்கு புதிதாக 2,810 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 56 நாட்களுக்குப் பின் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்துக்கு கீழ் குறைந்து. புதிதாக 1,971 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, ஈரோடு, சேலம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: