ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் யாரையும் மத்திய அரசு உளவு பார்க்கவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் யாரையும் மத்திய அரசு உளவு பார்க்கவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் யாரையும் மத்திய அரசு உளவுபார்க்கவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் யாரையும் மத்திய அரசு உளவுபார்க்கவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

கடந்த 2019ம் ஆண்டு ஏற்கனவே, வாட்ஸ் ஆப் செயலியின் தகவல்களை இதே பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டையும் ஏற்கனவே மத்திய அரசு நிராகரித்திருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் யாரையும் மத்திய அரசு உளவுபார்க்கவில்லை என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடு முழுவதும் பெகாசஸ் ஸ்பைவேர் எனும் செயலி மூலம் பத்திரிகையாளர்கள், இரு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட 2000க்கும் மேற்பட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Also read: பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்ப்பதற்கு எமர்ஜென்ஸியை மத்திய அரசு அறிவித்து விடலாம்: திருமுருகன் காந்தி ஆவேசம்

இந்நிலையில், இதுதொடர்பாக மக்களவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்திய அரசு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பாக யாரையும் அதிகாரப்பூர்வமாக உளவு பார்க்கவில்லை. இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை மத்திய அரசு மீது சுமத்துகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு ஏற்கனவே, வாட்ஸ் ஆப் செயலியின் தகவல்களை இதே பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டையும் ஏற்கனவே மத்திய அரசு நிராகரித்திருந்தது. இதுவரை அந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Also read: கொங்குபகுதி மக்களின் தேவைகளை மாநில அரசு நிறைவேற்றுவதை பொறுத்தே கொங்கு நாடு விவகாரத்தில் நடவடிக்கை: வானதி சீனிவாசன்

மேலும், நாடாளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாளில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறானது. இந்திய அரசுக்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எண்ணம் ஒருபோதும் இருந்தது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Central govt, IT Minister