தன்பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

இந்தியாவின் சட்ட அமைப்புகளும், சமூக மாண்புகளும் ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிப்பதில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தன்பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
டெல்லி உயர் நீதிமன்றம்
  • News18 Tamil
  • Last Updated: September 15, 2020, 3:04 PM IST
  • Share this:
தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தார், நம் நாட்டின் சட்டங்கள், சட்ட அமைப்பு மற்றும் சமூகம் ஆகியவை ஒரே பாலின தம்பதியரை அங்கீகரிப்பதில்லை எனவும், இதனால் இந்தத் திருமண முறையை ஏற்க இயலாது எனவும் குறிப்பிட்டார்.

தண்டனை மற்றும் நிவாரணம் வழங்குவதில் ஆண், பெண் இடையே பல்வேறு வேற்றுமைகள் உள்ள திருமணச் சட்டத்தில், ஓரின திருமணத்தில் யாரை கணவன், மனைவியாக கருதமுடியும் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் 2018ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஓரின சேர்க்கையை குற்றமல்ல என்றுதான் கூறியதாகவும், அதைத்தாண்டி அத்தீர்ப்பில் வேறு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறினார்.

மேலும் படிக்க...கொரோனா வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது: பெண் நுண்ணுயிர் ஆராயச்சியாளர் தகவல்


இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த டெல்லி உயர்நீதிமன்றம், அக்டோபர் 21ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
First published: September 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading