• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஏர் இந்தியா விற்பனைக்கு தயார் - விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

ஏர் இந்தியா விற்பனைக்கு தயார் - விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

ஏர் இந்தியா (மாதிரிப்படம்)

ஏர் இந்தியா (மாதிரிப்படம்)

  • News18
  • Last Updated :
  • Share this:
ஏர் இந்தியாவை முற்றிலும் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், ந‌‌ஷ்டத்தில் இருந்து வருகிறது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் இந்த நிறுவனம், ரூ.7,600 கோடி ந‌‌ஷ்டத்தை சந்தித்து உள்ளது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி , முதல் தர விமான நிறுவனமாக ஏர் இந்தியா திகழ்வதாக தெரிவித்தார். எனினும், விமானங்களை மத்திய அரசு நடத்தக் கூடாது என்றே விரும்புவதாகவும், ஏர் இந்தியாவை தனியார் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

எனவே, மிகவும் சிறந்த திட்டத்தை மிகவும் குறுகிய காலத்தில் செயல்படுத்த மத்திய அரசு விரும்புவதாகவும் அவர் கூறினார். ஏர் இந்தியாவை நடத்த பலரும் ஆர்வமாக இருப்பதாகவும், அதில் ஒருவர் பெறுவார் என்றும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளாக ஏர் இந்தியாவின் பங்குகளை மத்திய அரசு விற்க முயன்றது. ஆனால், யாரும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க... 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: