இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிக்க வரும் செவ்வாய் கிழமை மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இலங்கை விவகாரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை மத்திய அரசு தாமாக முன்வந்து நடத்துகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த கட்சிகள் இலங்கையின் நிலை குறித்து மத்திய அரசிடம் தங்கள் கவலையை தெரிவித்ததன் பேரில் இந்த அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் இலங்கையின் நிலை குறித்து தனது கவலையை தெரிவித்து வருகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில்,இதற்கான அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக சார்பில் டிஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் இதில் பங்கேற்றனர். இவர்கள் மூலம் கூட தமிழ்நாடு அரசு இலங்கை விவகாரம் தொடர்பான கவனத்தை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியிடம் கொண்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் இந்திய அரசும் இலங்கைக்கு தேவையான உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தாண்டு மட்டும் சுமார் 3.8 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது. சுற்றுலாத்துறையை வெகுவாக நம்பியுள்ள இலங்கையில் கோவிட் பெருந்தொற்று,ரஷ்யா- உக்ரைன் போர் ஆகியவை காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள், எரிபொருள், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
இதையடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 9ஆம் தேதி தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, அதை சூறையாடினார். கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டிற்கு தப்பி அதிபர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரணில் இடைக்கால அதிபராக தேர்வாகியுள்ளார். புதிய அதிபர் தேர்வு வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பாஜகவின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளாராக ஜக்தீப் தங்கர் தேர்வு..'விவசாயி மகன்' என பிரதமர் மோடி புகழாரம்!
நிலைமையை மேம்படுத்த பல்வேறு நாடுகளின் உதவியை இலங்கை அரசு நாடிவரும் நிலையில், இந்தியா மட்டுமே இதுவரை உதவிக்கரம் நீட்டியுள்ளதாக அந்நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் அமைச்சர் கஞ்சனா விஜிசேகரா தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: All Party Meeting, External Minister jaishankar, Nirmala Sitharaman, Sri Lanka, Sri Lanka political crisis