முகப்பு /செய்தி /இந்தியா / குடிமகனாக உதவுகிறேன்; அதிகாரியாக அல்ல...! மீண்டும் பணிக்கு திரும்ப அரசு விடுத்த அழைப்பை நிராகரித்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி

குடிமகனாக உதவுகிறேன்; அதிகாரியாக அல்ல...! மீண்டும் பணிக்கு திரும்ப அரசு விடுத்த அழைப்பை நிராகரித்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி

கண்ணன் கோபிநாதன் (கோப்புப் படம்)

கண்ணன் கோபிநாதன் (கோப்புப் படம்)

”ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த கண்ணன் கோபிநாதன் காஷ்மீர் 370வது பிரிவு நீக்கப்பட்டதையடுத்து தனது பணியிலிருந்து விலகினார்”

  • Last Updated :

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் மீண்டும் பணியில் சேரவேண்டும் என அரசு விடுத்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த கண்ணன் கோபிநாதன் காஷ்மீர் 370வது பிரிவு நீக்கப்பட்டதையடுத்து தனது பணியிலிருந்து விலகினார். கடந்த ஆகஸ்ட் மாதம் விலகிய அவரை கொரோனா விவகாரத்தையொட்டி பணியில் சேர்வதற்கு அரசு தரப்பிலிருந்து அழைப்புக் கடிதம் வந்தது. அவருடைய ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதை அவர் அரசு தரும் தொந்தரவு என சாடியிருப்பதோடு, இக்கட்டான இந்த கொரோனா காலத்தில் அரசுக்கு உதவத் தயாராக உள்ளதாகவும் அரசு அதிகாரியாக இல்லாமல் பொறுப்புள்ள ஒரு குடிமகனாக அதைச் செய்வதாக தெரிவித்துள்ளார்.

8 மாதங்களுக்கு முன் பணியிலிருந்து விலகிய மறுவாரமே அவர் பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு அழைப்பது விடுத்தது. அதை நிராகரித்த அவர் இரண்டாவது முறையாக அரசின் அழைப்பை நிராகரித்துள்ளார்.

Also see:

First published:

Tags: Article 370, CoronaVirus