கிளிமாஞ்சாரோவில் இந்திய தேசிய மூவர்ணக்கொடியைப் பறக்க விட்ட கோரக்பூர் மாணவர்

கிளிமாஞ்சாரோவில் இந்திய தேசிய மூவர்ணக்கொடியைப் பறக்க விட்ட கோரக்பூர் மாணவர்

கிளிமாஞ்சாரோ சிகரத்தில் தேசியக் கொடியேற்றிய மாணவர்.

ஆப்பிரிக்க நாட்டின் கிளிமாஞ்சாரோ சிகரத்தில் மற்ற நாட்டினர் தங்கள் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படுகிறது.

  • Share this:
உலகின் உயரமான மலைச்சிகரங்களுள் ஒன்றான கிளிமாஞ்சாரோவில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை பறக்க விட்டார் கோரக்பூரைச் சேர்ந்த மாணவர் நிதிஷ்குமார்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிக உயரமான சிகரம் கிளிமாஞ்சாரோ. நிதிஷ்குமார் தேதி தான்சானியாவை அடைந்து ஜனவரி 23ம் தேதி கிளிமாஞ்சாரோ அடிவாரத்தை அடைந்தார்.

கடல் மட்டத்துக்கு மேலே 5,895 மீட்டர்களை நிதிஷ் குமார் ஏறினார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று அங்கு மலைச்சிகரத்தில் மூவர்ணக் கொடியைப் பறக்க விட்டார்.

இது தொடர்பாக நிதிஷ் குமார் கூறும்போது, “என் கடினங்களைச் சமாளிக்க மக்கள் உதவினார்கள். இப்போது உலகின் 7 மலையுச்சிகளை தொட குறிக்கோள் வைத்துள்ளேன், என் இந்த பயணத்தில் உதவிய திருநங்கைகளுக்காகவும் கொடியை நான் ஏற்றினேன்” என்றார்.

சுமார் 3 நாட்கள் கிளிமாஞ்சாரோ மலையில் ஏறுவதற்கு தனக்கு 3 நாட்கள் ஆனது என்றார் நிதிஷ் குமார்.

ஆப்பிரிக்க நாட்டின் கிளிமாஞ்சாரோ சிகரத்தில் மற்ற நாட்டினர் தங்கள் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படுகிறது.

இதனையடுத்து உத்தரப்பிரதேச அழைப்புக்கு இணங்க மாணவர் நிதிஷ் குமார் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published: