Home /News /national /

இந்தியாவின் வானிலை பெண் அன்னா மணியின் 104 வது பிறந்த நாளை டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

இந்தியாவின் வானிலை பெண் அன்னா மணியின் 104 வது பிறந்த நாளை டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

 "இந்தியாவின் வானிலை பெண்" அன்னா மணி

"இந்தியாவின் வானிலை பெண்" அன்னா மணி

அன்னா மணி இந்தியாவில் வானிலை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய பணியாற்றியவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    உலகளவில் இணையத்தில் முக்கிய தேடல் செயலியான கூகுள், இன்று தனது டூடுல் முகப்பில் இந்தியாவின் வானிலை பெண் அன்னா மணியின் 104வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவரின் ஓவியப்படத்துடன் சிறப்பித்துள்ளது.

    அன்னா மணி இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளர் மற்றும் வானிலை ஆய்வாளர். இந்தியாவின் வானிலை ஆராய்ச்சி மற்றும் வானிலை தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பெரிதும் பணியாற்றியவர். இவரின் ஆய்வு தான் தற்போது துல்லியமாக வானிலை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ஊக்குவித்து வித்திட்டவர்.

    "இந்தியாவின் வானிலை பெண்" அன்னா மணி


    அன்னா மணி கேரளாவில் பீருமேட் என்ற இடத்தில் 1918 ஆகஸ்ட் 23 பிறந்தார். 1939இல் மெட்ராஸ் மாநில கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பின்பு இந்திய அறிவியல் கழகத்தில் நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன் தலைமையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். அவர் முதுகலை முடிக்கவில்லை என்ற காரணத்தினால் சென்னை பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்க மறுத்து விட்டது.

    1942இல் இருந்து 1945ம் ஆண்டு வரை 5 முக்கிய ஆராய்ச்சி கட்டுரைகளை முனைவர் பட்ட படிப்பிற்காக வெளியிட்டுள்ளார். அவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் இன்னும் பெங்களூர் சி.வி.ராமன் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் லண்டன் சென்ற அவர் இம்பீரியல் கல்லூரியில் வானிலை கருவிகள் குறித்த கற்றுக்கொண்டார்.

    Also Read : மனைவியை ரயிலில் தள்ளி கொலை செய்த கணவர்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

    1948இல் இந்தியா திரும்பிய அவர் இந்திய வானிலை நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். வானிலையை அறிந்துகொள்ள உதவும் கருவிகளை உருவாக்கினார். மேலும் தனது திறமையால் 1953இல் அவர் வேலை செய்த பிரிவுக்குத் தலைமை பொறுப்பை ஏற்றார். நிலையான ஆற்றலை அறியவும் சூரிய காந்த அலைகளைக் கண்காணிக்கவும் பல ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார். ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பில் பங்காற்றியவர். இவரை சிறப்பிக்கும் விதமாக 1987இல் இவருக்கு INSA K. R. ராமநாதன் பதக்கம் வழங்கப்பட்டது.

    அன்னா மணி தனதுஓய்வுக்குப் பிறகு சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தையும் தோற்றுவித்தார். 2001ம் ஆகஸ்ட் 16ம் நாள் திருவனந்தபுரத்தில் உயிர் எய்தினார். தற்போது இவரின் பங்களிப்பைச் சிறப்பிக்கும் விதமாக இன்று கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Birthday, Google Doodle

    அடுத்த செய்தி