ரயில் பயணிகள் சந்தித்து வந்த நீண்ட நாள் பிரச்னைக்கு இந்திய ரயில்வே ஒரு நிரந்தர தீர்வை தற்போது கொண்டு வந்துள்ளது. படுக்கை வசதி கொண்ட ரயில்களின் லோயர் பெர்த் வடிவமைப்பில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ரயில் பயணிகளின் வசதிகேற்ப இந்திய ரயில்வே நிர்வாகமும் போக்குவரத்து மற்றும் ரயிலில் முக்கிய மாற்றங்களை முன்னெடுத்து வருகிறது.
படுக்கை வசதி கொண்ட ரயில்களிலன் அதிகப்படியான பயணிகள் பயணம் செய்கின்றனர். இதில் முன்பதிவு டிக்கெட் RAC என்றால் சைட் லோயர் பெர்த் உட்கார்ந்து பயணிப்பது போல் இருக்கும். பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் பட்சத்தில் உட்கார்ந்து பயணிக்கும் சீட்டை மடித்து படுக்கும் வசதிக்கு கொண்டு வரலாம்.
ஆனால் இந்த சைட் லோயர் பெர்த்துகளில் நடுவில் எந்த பிடிமானம் இல்லாததும், இரு இருக்கைகளுக்கு மத்தியில் இடைவெளி இருப்பதும் பயணிகளுக்கு சிரமாக இருந்தது. இதனால் பயணிகள் நிம்மதியாக தூங்குவது கிடையாது. ரயில் பயணத்தில் இது நீண்ட பிரச்னையாக தொடர்ந்தது.
Also Read : ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் தெரியுமா?
தற்போது இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி சைடு லோயர் பெர்த்தில் மடித்து விட்டு, அதன்மீது மற்றொரு பெர்த் போடப்படுகிறது. இதனால் இடைவெளியும் இருக்காது, நடுவில் பிடிமானம் இல்லை என்ற சிரமமும் இருக்காது. அது எப்படி இருக்கும் என்ற வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பாடுபட்டு வருவதாகவும், பயணிகளின் பயணத்தை வசதியாக மாற்றுவதற்காக இருக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்