• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! - முழு விவரம் உள்ளே

சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! - முழு விவரம் உள்ளே

Shirdi Saibaba

Shirdi Saibaba

நவராத்திரி முதல் நாளான இன்று (அக்டோபர் 7) முதல் சீரடி சாய்பாபா கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

  • Share this:
இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு பிறகு, சீரடிக்கு தான் அதிகம் பேர் வருவதாக முக்கிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மும்பையிலிருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சீரடி என்ற இடம் சாய் பாபாவின் வீடு என்று அறியப்படுகிறது. சாய் பாபாவை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும் என்கிற நம்பிக்கை உண்டு.

சாதாரண நாட்களில் தினசரி 60,000 பக்தர்கள் சாய்பாபாவை தரிசிப்பதற்காக மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடிக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த திருத்தலம் மும்பையிலிருந்து 250 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டதால் சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் தற்போது வழிபாட்டு தலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதனிடையே கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நவராத்திரி முதல் நாளான இன்று (அக்டோபர் 7) முதல் சீரடி சாய்பாபா கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. இதே போல மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் ஆலயமும், சிங்நாபூர் சனீஸ்வர பகவான் ஆலயமும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு சில வழிகாட்டு நெறிமுறைகளை சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. அதில் முக்கியமானதாக, ஒரு நாளில் 15,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது,

Also Read: 7.20 லட்சம் கிமீ நீள வாலுடன் உலவும் மர்மப் பொருள் – விண்வெளியில் ஒரு அற்புதம்!

மேலும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாதவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரசாத ஸ்டால்கள் திறக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய்வாய்பட்டவர்களுக்கு கோவிலில் அனுமதி இல்லை, அதே போல ஆன்லைன் பாஸ் இல்லாதவர்களும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:  பிஎம் கேர்ஸ் நிதி மீது முறைகேடு புகார் கூறிய எதிர்கட்சிகள் செய்த விநோதம்!

மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து மறைந்த தெய்வங்களான பல மகான்கள் இருந்த போதிலும், மதம், மொழி, இனம் போன்ற அடையாளங்களை கடந்து வலியவர்களுக்கு அற்புதம் செய்யும் தெய்வமாக போற்றப்படுகிறார் சீரடி சாய்பாபா. அற்புதங்களை சாய்பாபா மட்டும் செய்யவில்லை சீரடியில் உள்ள பலவும் அற்புதங்களால் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: