தங்க ஆமை வண்டுகளை பார்த்திருக்கிறீர்களா? ஆச்சர்யப்பட வைக்கும் வீடியோ!

தங்க ஆமை வண்டுகள்

இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுஷாந்தா நந்தா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்தார். அதை கண்ட நெட்டிசன்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். அவர் பகிர்ந்த வீடியோவில் தங்க ஆமை வண்டுகள் ஒரு மனிதனின் கைகளில் ஊர்ந்து செல்வதைக் காணலாம்.

  • Share this:
எண்ணற்ற ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் கொண்டது தான் இயற்கை என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. இன்றைக்கும் இயற்கையில் நிகழும் சில அதிசயங்கள் நமக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. இருப்பினும், இப்போதுள்ள தொழில்நுட்பங்கள் இயற்கை அன்னையின் படைப்பை உலகளவில் வெளிச்சம் போட்டு காட்ட உதவுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியான சமீபத்திய நிகழ்வு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுஷாந்தா நந்தா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்தார். அதை கண்ட நெட்டிசன்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். அவர் பகிர்ந்த வீடியோவில் தங்க ஆமை வண்டுகள் ஒரு மனிதனின் கைகளில் ஊர்ந்து செல்வதைக் காணலாம். இந்த கோல்டன் ஆமை வண்டுகள், சரிடோடெல்லா செக்ஸ்பங்டாட்டா (Charidotella sexpunctata) என்றும் அழைக்கப்படுகின்றன. இது இலை வண்டு குடும்பமான கிரிசோமெலிடேயில் (Chrysomelidae) ஒரு வண்டு இனமாகும்.

17 விநாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பில், சிறிய தங்க நிற பூச்சிகள் ஒருவரின் கையில் உட்கார்ந்து ஊர்ந்து செல்வதை காணலாம். அதில் ஒன்று அவர் கைகளில் இருந்து பறந்து செல்வதையும் காணலாம். அந்த பதிவில் நந்தா குறிப்பிட்டதாவது, "சில நேரங்களில், மின்னுவதெல்லாம் பொன் தான். இந்த கோல்டன் வண்டுகள் தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார்.

https://twitter.com/susantananda3/status/1368946752829591552

ஐ.எஃப்.எஸ் அதிகாரி பகிர்ந்த இந்த வசீகரிக்கும் வீடியோ வைரலாகி மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் பிரபலமடைந்து வருகிறது. நந்தாவின் இந்த குறுகிய வீடியோ கிளிப் இதுவரை 232 ரீட்வீட் மற்றும் 1,420 லைக்குகளுடன் 12,000 க்கும் மேற்பட்ட வியூஸ்களைப் பெற்றுள்ளது. வீடியோவைக் கண்டு வியப்படைந்த நெட்டிசன்கள் பலர் தங்கள் எண்ணங்களை கருத்து பிரிவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு ட்விட்டர் யூசர், ஒரு சிறிய ஆமையைப் போல, பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு நபரோ, `இது ஆச்சரியமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார். மற்றொருவர் கமெண்ட் செக்சனில் இது ‘அசாதாரணமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு நபர் இதேபோன்ற கோல்டன் ஆமை வண்டினை மத்திய பிரதேசத்தில் பார்த்ததாக அதன் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

கோல்டன் ஆமை வண்டுகள் அவற்றின் நிறத்தில் வேறுபடுகின்றன. அவை சிவப்பு-பழுப்பு நிறத்தில் கருப்பு புள்ளிகளை கொண்ட வண்டுகள் முதல் கண்ணாடி போன்ற தங்க நிறங்கள் வரை வேறுபடுகின்றன. அவை பெரும்பாலும் பிண்ட்வீட்ஸ், மார்னிங் க்ளோரி மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற தாவர இலைகளை உட்கொள்கின்றன. இந்த வண்டுகளிடையே இருக்கும் ஒரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அவற்றை தொந்தரவு செய்யும்போது அவை இறந்துவிட்டது போல நம்மிடம் விளையாடும்.
Published by:Ram Sankar
First published: