பொன் வங்காளம் என்ற கனவு நனவாக தொடர்ந்து பாஜக பணியாற்றும்: ஜே.பி. நட்டா திட்டவட்டம்

ஜே.பி. நட்டா

தங்க வங்காளம் என்ற கனவு நனவாக தொடர்ந்து பாஜக உழைக்கும். என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தங்க வங்காளம் என்ற கனவு நனவாக தொடர்ந்து பாஜக உழைக்கும். என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

  மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின இதில் 213 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் ஆட்சியைப்பிடிப்போம், மம்தாவை வீட்டுக்கு அனுப்புவோம் என்றெல்லாம் பேசி கடைசியில் 77 இடங்களில் பெற்ற வெற்றியையே ஏதோ மாநிலத்தைப் பிடித்து விட்டது போல் பாஜக பேசி வருவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

  200 இடங்களில் வெல்லும் என்று கடுமையாகப் பிரச்சாரம் செய்தனர், ஆனால் பிரசாந்த் கிஷோர் கணக்குத்தான் வென்றது, 100 இடங்கள் வந்தால் என் தொழிலையே விட்டு விடுகிறேன் என்றார், அவரது சபதம் நிறைவேறியது, ஆனால் தொழிலையும் விட்டு விட்டார்.

  பாஜக 77 இடங்களுக்கு முன்னேற காங்கிரஸ் இடதுசாரிக் கூட்டணியோ டக் அடித்து அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது. பாஜகவுக்குத் தாவிய திரிணாமூல் வேட்பாளர்களில் 3 பேர்தான் வெற்றி பெற்றனர், பாக்கி அனைவரும் படுதோல்வி அடைந்தனர். பதவிக்காகவும் பணத்துக்காகவும் ஊழலிலிருந்து தப்பிக்கவும் பாஜகவை தஞ்சமடைந்தவர்களுக்கு மேற்கு வங்க மக்கள் தக்க பாடம் புகட்டியதாக திரிணாமூல் தலைவர்கள் இதை வருணித்து வருகின்றனர்.

  தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியதாவது:

  மேற்கு வங்க மக்கள் அளித்த தீர்ப்பை மரியாதையுடன் ஏற்கிறோம், எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ்க்கும், அவரின் கடின உழைப்புக்கும் நன்றி.

  தங்க வங்காளம் என்ற கனவு நனவாக தொடர்ந்து பாஜக உழைக்கும். பாஜக தனது சித்தாந்தத்தை மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்க்கும். இது பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி, பிரதான எதிர்க்கட்சியாக பாஜக முன்னேறியுள்ளது.

  அசாம், புதுச்சேரி, தமிழகம், கேரளாவிலும் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: