ஹோம் /நியூஸ் /இந்தியா /

தங்க கடத்தல் வழக்கு: கேரள உயர்கல்வித்துறை அமைச்சரிடம் அமலாக்கத்துறை விசாரணை

தங்க கடத்தல் வழக்கு: கேரள உயர்கல்வித்துறை அமைச்சரிடம் அமலாக்கத்துறை விசாரணை

கேரளா அமைச்சர் ஜலீல்

கேரளா அமைச்சர் ஜலீல்

கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வெளியுறவுத்துறையின் அனுமதி இல்லாமல் திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அன்பளிப்புகளை பெற்ற விவகாரம் தொடர்பாக கேரள அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்க கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அமைச்சர் ஜலீல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

தூதரகத்திலிருந்து உணவு பொருட்கள் மற்றும் குர்ஆன் நூல்களை தனது உறவினர்களுக்கு அமைச்சர் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தூதரகத்திடமிருந்து அமைச்சர் பார்சல் பெற்றது தொடர்பாக ஜலீலிடம் அமலாக்கத்துறையினர் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க...கொரோனா தாக்கம் குறைந்த பிறகே மாநிலங்களிடையே பேருந்து சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இதனிடையே கேரளாவில் அமைச்சர் ஜலீல் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

First published:

Tags: Gold, Kerala, Smuggling