முகப்பு /செய்தி /இந்தியா / ஜம்மு காஷ்மீரில் 1,300 ஆண்டுகள் பழமையான துர்க்கை சிலை கண்டுபிடிப்பு!

ஜம்மு காஷ்மீரில் 1,300 ஆண்டுகள் பழமையான துர்க்கை சிலை கண்டுபிடிப்பு!

துர்க்கை சிலை மீட்பு

துர்க்கை சிலை மீட்பு

புட்காம் பகுதியில் துர்க்கை சிலை கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக கடந்த அக்டோபர் இறுதியில் கூட கருங்கல்லால் செய்யப்பட்ட துர்கா தேவியின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலை சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முந்தையது என மதிப்பிடப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் பழமையான துர்கா தேவி சிலை உள்ளூர் போலீஸாரால் 2 தினங்களுக்கு முன் மீட்கப்பட்டது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள துர்கா தேவியின் சிலை 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது மற்றும் கருங்கல்லால் செய்யப்பட்டது. 1,300 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த துர்கா தேவி சிலை, புட்காம் மாவட்டத்தின் Khag பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

சிங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் துர்க்கை சிலையை ஆய்வு செய்வதற்காக ஜம்மு காஷ்மீர் காப்பகங்கள், தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியகங்களின் அதிகாரிகள் குழுவை போலீசார் வரவழைத்தனர். ஆய்வுக்கு பிறகே இந்த துர்கா தேவியின் சிலை கி.பி. 7ஆம் நூற்றாண்டு அல்லது சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய சிலையாக இருக்கலாம் என்று அந்த குழு தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் "கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த துர்கா தேவியின் சிலையில், துர்க்கை சிங்க சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. துர்கா தேவியின் சிற்பத்தில் தோள்பட்டையின் இடதுபுறம் காணப்படவில்லை, காந்தாரப் பள்ளியின் தாக்கம் காணப்படுகிறது மற்றும் வலது கையில் தாமரை போன்ற சிற்பம் உள்ளது" என்றார்.

ALSO READ |  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் பரிசு

இதனிடையே புட்காம் காவல்துறை மீட்கப்பட்ட சிலையின் படங்களை "புட்காம் போலீஸ் காக் பகுதியில் இருந்து 1,300 ஆண்டுகள் பழமையான துர்கா தேவியின் சிலையை மீட்டுள்ளது" என குறிப்பிட்டு தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் ஷேர் செய்து இருக்கிறது. பின்னர் இந்த துர்கா தேவியின் சிற்பம் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. புட்காம் பகுதியில் துர்க்கை சிலை கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையல்ல.

முன்னதாக கடந்த அக்டோபர் இறுதியில் கூட கருங்கல்லால் செய்யப்பட்ட துர்கா தேவியின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலை சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முந்தையது என மதிப்பிடப்பட்டது. இந்த சிலை சில தொழிலாளர்கள் ஜீலம் ஆற்றுப் படுகையில் மணல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தட்டுப்பட்ட பழங்கால சிலையை பத்திரமாக தோண்டி எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

ALSO READ |  மணமகனைப் போல குதிரையில் வந்து கெத்து காட்டிய மணப்பெண்!

12 அங்குலம், 8 அங்குலம் (24 செ.மீ. 20 செ.மீ.) அளவில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட இந்த துர்கா தேவி சிலையும் அப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சிலையை போலவே சிங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த சிலையும் ஜம்மு & காஷ்மீர் அரசின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

top videos

    அதே போல் கடந்த அக்டோபரில் உஜ்ஜயினியில் உள்ள மகாகலேஸ்வர் கோவில் வளாகத்தில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் 9 அல்லது 10-ஆம் நூற்றாண்டு காலகட்டத்திலான சிவலிங்கம் மற்றும் கிட்டத்தட்ட அதே காலத்திற்கு முந்தைய விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

    First published:

    Tags: Archaeology, Durga Puja, Jammu and Kashmir