ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாட்டை காப்பாற்ற கடவுளால் உருவாக்கப்பட்டதுதான் ஆம் ஆத்மி கட்சி.. அரவிந்த் கேஜ்ரிவால் பேச்சு

நாட்டை காப்பாற்ற கடவுளால் உருவாக்கப்பட்டதுதான் ஆம் ஆத்மி கட்சி.. அரவிந்த் கேஜ்ரிவால் பேச்சு

டெல்லி கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் உரை

டெல்லி கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் உரை

தீமைகளை அழித்து நாட்டை பாதுகாக்கவே ஆம் ஆத்மி கட்சியை கடவுள் உருவாக்கியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் அக்கட்சியின் முதல் தேசிய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 மாநிலங்களைச் சேர்ந்த 1,4446 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

  இந்த கூட்டமானது வரப்போகும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்கான முன்னேற்பாடுகளை மையமாக வைத்து நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் உரையாற்றிய அரவிந்த் கேஜ்ரிவால், "10 ஆண்டு குழந்தையான ஆம் ஆத்மி கட்சி பாஜக, காங்கிரஸ் போன்ற பெரும் கட்சிகளை எதிர்த்து களத்தில் முனைப்புடன் நிற்கிறது. இது மகாபாரத்தில் கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும்போது தான் பல அரக்கர்களை கொன்று வீழ்த்தினார். அப்படிதான் ஆம் ஆத்மி கட்சியும் தனது குழந்தை பருவத்திலேயே மோசமான அரசியல், வேலையின்மை, ஊழல் போன்றவற்றுக்கு காரணமான பெரும் அரசியல் கட்சிகளை வீழ்த்தி வருகிறது. தீமைகளை அழிக்க கிருஷ்ணர்போல அவதாரம் எடுத்த கட்சிதான் ஆம் ஆத்மி கட்சி. இதற்காகதான் ஆம் ஆத்மி கட்சியை கடவுள் உருவாக்கியுள்ளார்.

  கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக நாட்டை சீரழித்து வருகின்றன. இதற்கு தீர்வு கட்டதான் 2012ஆம் ஆண்டு நாட்டை காப்பாற்ற ஆம் ஆத்மி கட்சியை கடவுள் உருவாக்கினார். கடவுள் நம்மிடம் ஒப்படைத்த பொறுப்பை மனதில் வைத்து நாம் செயல்பட வேண்டும்.

  இதையும் படிங்க: பாஜகவில் ஐக்கியமாகும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்..!

  சுதந்திர போராட்டத்தின்போது நாடு முழுவதும் தியாகிகள் ஆங்கிலேயே ஆதிக்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடினார்கள். இப்போது நாம் இந்தியாவை உலகின் முதல் நாடாக கொண்டுவர ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். இதற்கான விதைகள்தான் 20 மாநிலங்களில் தூவப்பட்டுள்ளது. இது மரமாக முளைத்து மலர்களை விரைவில் தரும். டெல்லி, பஞ்சாப்பை போலவே நாம் குஜராத்திலும் ஆட்சி அமைப்போம். ஆம் ஆத்மி கட்சியின் நேர்மையை, மக்கள் நல கொள்கைகளை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதானால் தான் எம்எல்ஏக்களை விலை பேசி, சிபிஐ போன்ற அமைப்புகளை ஏவி விடுகிறது." இவ்வாறு அவர் பேசினார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal