ஹோம் /நியூஸ் /இந்தியா /

கோவா சொகுசு வீடு.. சிக்கலில் மாட்டிய யுவராஜ் சிங்.. விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

கோவா சொகுசு வீடு.. சிக்கலில் மாட்டிய யுவராஜ் சிங்.. விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

யுவராஜ்சிங்

யுவராஜ்சிங்

தனது சொகுசு வீட்டை ஹோம் ஸ்டே(Home stay) என்ற முறையில் வாடைகைக்கு விட்டுள்ள யுவராஜ் சிங் அதை அம்மாநில சுற்றுலாத் துறையிடம் முறையாக பதிவு செய்யவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Goa, India

  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது சொகுசு விடுதிக்கான சான்றிதழை புதுப்பிக்காத காரணத்திற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2007, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ். புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி அதில் இருந்து மீண்டு வந்த இவர் 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான யுவராஜ் கோவா மாநிலம் மோர்ஜிம் என்ற பகுதியில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த சொகுசு வீட்டிற்கு காசா சிங் என்று பெயரிடப்பட்டுள்ளது.

  தனது சொகுசு வீட்டை ஹோம் ஸ்டே(Home stay) என்ற முறையில் வாடைகைக்கு விட்டுள்ள யுவராஜ் சிங் அதை அம்மாநில சுற்றுலாத் துறையிடம் முறையாக பதிவு செய்யவில்லை. இதையடுத்து கோவா சுற்றுலாத்துறை இணை இயக்குனர் ராஜேஷ் காலே யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வரும் டிசம்பர் 8ஆம் தேதி 11 மணிக்கு யுவராஜ் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் தர கோவா சுற்றுலாத்துறை உத்தரவிட்டுள்ளது.

  இதையும் படிங்க: பேட்டியில் ஷாக் தகவல்கள்.. யுனைடெட் அணியில் இருந்து விலகிய ரொனால்டோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

  கோவா சுற்றுலா சட்டம் 1982இன் கீழ் முறையாக பதிவு செய்யவேண்டும்.ஆனால் யுவராஜ் தனது சொகுசு வீட்டிற்கு இதை செய்யவில்லை. ஒருவேளை ஆஜராகி முறையாக விளக்கம் தரவில்லை என்றால் விதிமீறல் குற்றத்திற்காக தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Goa, Yuvraj singh