முகப்பு /செய்தி /இந்தியா / கோவாவில் கொரோனா பெருந்தொற்றால் முதல் உயிரிழப்பு

கோவாவில் கொரோனா பெருந்தொற்றால் முதல் உயிரிழப்பு

  • Last Updated :

கோவாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வடக்கு கோவாவின் மோர்லெம் நகரை சேர்ந்த 85 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து பேசியுள்ள கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே, மாநிலத்தில் பதிவாகியுள்ள முதல் உயிரிழப்பு மூதாட்டியின் மரணம் என தெரிவித்துள்ளார்.

Also read... புழல் சிறையில் மேலும் 11 கைதிகளுக்கு கொரோனா... சிறை வளாகத்தில் சிகிச்சை

கொரோனா தொற்றில் புதிய அறிகுறிகள் - பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தல்

top videos

    கோவாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 754 பேரில் 129 குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் விஸ்வஜித் ரானே கூறியுள்ளார்.

    First published:

    Tags: CoronaVirus