மனோகர் பாரிக்கர் உடல் வைக்கப்பட்ட இடத்தில் சுத்தப்படுத்தும் பூஜை!

கலா அகாடமியில், பாரிக்கர் உடல் வைக்கப்பட்தால், தீட்டு ஏற்பட்டு விட்டதாகக் கூறி சுத்திகரிப்பு பூஜைக்கு கோவா அரசு உத்தரவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

news18
Updated: March 24, 2019, 9:53 AM IST
மனோகர் பாரிக்கர் உடல் வைக்கப்பட்ட இடத்தில் சுத்தப்படுத்தும் பூஜை!
மனோகர் பாரிக்கர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட கலா அகாடமி
news18
Updated: March 24, 2019, 9:53 AM IST
மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட கலா அகாடமியில் தீட்டுக் கழிப்பதற்காக சுத்தி பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மனோகர் பாரிக்கர் மார்ச் 17-ம் தேதி கணைய புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடல், கோவாவின் கலாச்சார மையமான கலா அகாடமியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கலா அகாடமியில், பாரிக்கர் உடல் வைக்கப்பட்டதால், தீட்டு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி சுத்தி  பூஜை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவாவின் பண்பாட்டுத்துறை அமைச்சர் கோவிந்த் கவுடே கூறும்போது, ‘‘கலா அகாடமியில், இதுபோன்ற எந்தவொரு சடங்குக்கும் இடமில்லை. சாந்தி பூஜை அல்லது சுத்தி பூஜை நடத்தியது குறித்த உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கலா அகாடமியின் செயலாளர் குருதாஸ் பிலர்னேகர், தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்றும், பாரிக்கர் உயிரிழந்த மறுநாள், தான் அங்கு வந்து பார்த்த போது கலா அகாடமியில் பணிபுரிந்த 3 பிராமணர்கள் சுத்தி பூஜை செய்து கொண்டிருந்தனர் என்றும், தன்னையும் கலந்து கொள்ள அழைத்தனர். அதுமட்டும் தான் தனக்கு தெரியும் என்று மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

பாரிக்கரின் உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தீட்டு கழிக்கும் நோக்கத்தோடு, சுத்தி பூஜை செய்த தகவல் பரவ ஆரம்பித்த நிலையில், சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
Loading...
Also See..

First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...