ஹோம் /நியூஸ் /இந்தியா /

”VVIP-க்களின் பாதுகாப்பு முக்கியம்” புல்லட் ப்ரூஃப் கார்களை அறிமுகப்படுத்தியுள்ள கோவா அரசு!

”VVIP-க்களின் பாதுகாப்பு முக்கியம்” புல்லட் ப்ரூஃப் கார்களை அறிமுகப்படுத்தியுள்ள கோவா அரசு!

புல்லட் ப்ரூஃப் கார்களை அறிமுகப்படுத்தியுள்ள கோவா அரசு!

புல்லட் ப்ரூஃப் கார்களை அறிமுகப்படுத்தியுள்ள கோவா அரசு!

புல்லட் ப்ரூஃப் வாகனமாக மாற்றப்பட்டுள்ள 2 டொயோட்டா ஃபார்ச்சூனர்களும் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டவை என்றும், இவற்றை புல்லட் ப்ரூஃப் கார்களாக மாற்றியமைக்க ரூ.70 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  நாட்டில் சுற்றுலாவிற்கு மிகவும் பிரபலமாக உள்ள மாநிலமான கோவாவிற்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பொதுமக்களை போலவே அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அதிகாரத்தில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் என அவ்வப்போது கோவாவிற்கு செல்கின்றனர்.

  இந்நிலையில் கோவா மாநிலத்திற்கு வரும் விஐபி-க்கள் மற்றும் விவிஐபி-க்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் பயணம் செய்ய ஏதுவாக 2 குண்டு துளைக்காத வாகனங்களை கோவா மாநில காவல்துறை சமீபத்தில் பெற்றுள்ளது. இதுநாள் வரை கோவா மாநிலத்திற்கு விவிஐபி-க்கள் வரும் போது குண்டு துளைக்காத புல்லட் ப்ரூஃப் வாகனங்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து கடன் வாங்கி கோவா அரசு பயன்படுத்தி வந்தது.

  உலக புகழ்பெற்ற டூரிஸ்ட் ஸ்பாட்டாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட விஐபி & விவிஐபி-க்கள் கோவாவுக்கு வருகிறார்கள். குறிப்பாக கிறிஸ்துமஸ் மற்றும் நியூஇயர் சீசனில் பொதுமக்களின் கூட்டத்தோடு சேர்ந்து விஐபி-க்களின் வருகையின் கோவாவில் அதிகரிக்கிறது. இந்நிலையில் தான் கோவா இப்போது சொந்தமாக 2 புல்லட் ப்ரூஃப் கார்களை கொண்டுள்ளது. விஐபி-க்கள் மற்றும் விவிஐபி-க்கள் கோவாவுக்கு சென்றால் அவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கான புல்லட் ப்ரூஃப் கார்களுக்காக இதுவரை மகாராஷ்டிரா அல்லது கர்நாடகா மாநிலங்களை கோவா போலீசார் நம்பியிருந்தனர்.

  Read More : "130 கோடி இந்தியர்களின் விருப்பம்... ரூபாய் நோட்டுகளில் லக்ஷ்மி, விநாயகர் படங்கள் வேண்டும்"..அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம்

  இதனிடையே ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ஃபோட்டோக்களின் படி, இந்த 2 குண்டு துளைக்காத கார்களும் மாடிஃபை செய்யப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி-க்கள் ஆகும். நாட்டில் Modified bulletproof vehicles பிரபலமாக உள்ளன. இதற்கு காரணம் பல விஐபி-க்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களது தினசரி பயணத்திற்கு இவற்றை விரும்பி பயன்படுத்துகின்றனர்.

  மாநில காவல்துறைக்கு இந்த 2 கார்களை வழங்கிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், "இனி விஐபி மற்றும் விவிஐபி வருகையின் போதுகவச வாகனங்களை பெற பிற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமிருக்காது. கடந்த 2019-ஆம் ஆண்டில், குண்டு துளைக்காத செயல்முறைக்கு அனுப்பப்பட்ட இரண்டு கார்களை நாங்கள் வாங்கினோம். அதற்கான செயல்முறை முற்றிலும் முடிந்துள்ள நிலையில், இப்போது அதை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். இனி விவிஐபி-க்கள் கோவாவிற்கு வரும் போது அவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பான protocol department இந்த 2 புல்லட் ப்ரூஃப் கார்களை பயன்படுத்தி கொள்ளலாம்" என்றார்.

  தற்போது புல்லட் ப்ரூஃப் வாகனமாக மாற்றப்பட்டுள்ள 2 டொயோட்டா ஃபார்ச்சூனர்களும் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டவை என்றும், இவற்றை புல்லட் ப்ரூஃப் கார்களாக மாற்றியமைக்க ரூ.70 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இதனிடையே புல்லட் ப்ரூஃப் கார்களை காவல்துறைக்கு வழங்கியதை தொடர்ந்து, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மகளிர் காவல் நிலையங்களை வலுப்படுத்த நிர்பயா திட்டத்தின் கீழ், மகளிர் காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களுக்கும் மடிக்கணினிகளையும் வழங்கினார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Gujarat