51-வது சர்வதேச திரைப்பட விழா குறைந்த பார்வையாளர்களுடன் நடைபெறும் - மத்திய அமைச்சர்

51-வது சர்வதேச திரைப்பட விழா குறைந்த பார்வையாளர்களுடன் நடைபெறும் - மத்திய அமைச்சர்

பிரகாஷ் ஜாவ்டேகர் (கோப்புப் படம்)

கோவாவில் நடைபெறும் 51-வது சர்வதேச திரைப்பட விழா குறைந்த பார்வையாளர்களுடன் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சர்வதேச கொரோனா குறும்படங்கள் விழா நேற்று டெல்லி நடைபெற்றது. அந்த விழாவில் மத்திய தகவல் மற்றும் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘51வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நடத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வும், நிறைவு நிகழ்ச்சியும் குறைந்தளவு பார்வையாளர்களுடன் நடத்தப்படும். திரைப்பட விழாவை மக்கள் ஆன்லைன் மூலம் காணலாம். இந்த சர்வதேச திரைப்பட விழாவில், 21 ஆவணப் படங்களும் இடம் பெறும்’ என்று தெரிவித்தார்.

  கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கான முன்பதிவு ஜனவரி 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவு நடைபெறும். கொரோனா பாதிப்பின் காரணமாக குறைவான பங்கேற்பாளர்களுக்கே அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னர், கோவா திரைப்பட விழா நவம்பர் மாதத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக தாமதப்படுத்தப்பட்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: