Home /News /national /

'மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் தோற்றுள்ளது' - கோவா தேர்தல் குறித்து ப.சிதம்பரம் விளக்கம்

'மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் தோற்றுள்ளது' - கோவா தேர்தல் குறித்து ப.சிதம்பரம் விளக்கம்

பதிவான வாக்குகளில் 33 சதவீதத்திற்கு சற்று அதிகமாகத்தான் பாஜக பெற்றுள்ளது. மற்ற வாக்குகள் சிதறி விட்டன. - ப.சிதம்பரம்.

பதிவான வாக்குகளில் 33 சதவீதத்திற்கு சற்று அதிகமாகத்தான் பாஜக பெற்றுள்ளது. மற்ற வாக்குகள் சிதறி விட்டன. - ப.சிதம்பரம்.

பதிவான வாக்குகளில் 33 சதவீதத்திற்கு சற்று அதிகமாகத்தான் பாஜக பெற்றுள்ளது. மற்ற வாக்குகள் சிதறி விட்டன. - ப.சிதம்பரம்.

    கோவா சட்டமன்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோற்றுப்போயுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. மினி நாடாளுமன்ற தேர்தலாக கருதப்படும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் அக்கட்சி ஆட்சியை இழந்துள்ளது.

    5 மாநில தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை ராஜஸ்தான், சட்டீஸ்கர் என  2ஆக குறைந்துள்ளது.

    இதையும் படிங்க - 'மாநில கட்சியாக காங்கிரஸ் மாறி வருகிறது': முன்னாள் மத்திய அமைச்சர் விமர்சனம்

    கோவா சட்டமன்றத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. தேர்தல் முடிவு குறித்து, கோவா மாநிலம் பனாஜியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது-

    கோவா மக்களின் முடிவை ஏற்கிறோம். இங்கு பல தடைகள் இருந்தாலும் எங்களது வேட்பாளர்கள் சிறப்பான முறையில் போட்டி கொடுத்தனர். மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம். பல கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்தததும் தோல்விக்கு ஒரு காரணம். பதிவான வாக்குகளில் 33 சதவீதத்திற்கு சற்று அதிகமாகத்தான் பாஜக பெற்றுள்ளது. மற்ற வாக்குகள் சிதறி விட்டன.
    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க - Bhagwant Mann : காமெடி நடிகராக வாழ்க்கையை தொடங்கி பஞ்சாபின் முதல்வராகப் போகும் பக்வாந்த் மன்...

    கோவா சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவற்றை பொய்யாக்கி பாஜக தற்போது ஆட்சியமைக்கவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Election 2022

    அடுத்த செய்தி