கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி கோவாவில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது.
கோவாவில் மொத்தம் உள்ள 40 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் இங்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டமன்றம் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெரும்பான்மை பெறுவதற்கு 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில், 20 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதையும் படிங்க -
ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்!
சுயேட்சைகள் உதவியோடு பாஜக மீண்டும் இங்கு ஆட்சியைப் பிடிக்கும் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில், ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரியுள்ளது. இதுதொடர்பாக ஆளுநரிடம் பாஜக தலைவர்கள் கடிதம் அளித்துள்ளனர். கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.
இதையும் படிங்க -
Yogi Adityanath UP Election Results 2022- யோகி ஆதித்யநாத் சாதனை - கட்டுக்கதைகளை உடைத்தார்
பஞ்சாபில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில், 90 இடங்களில் முன்னணி வகிக்கிறது. கடந்த தேர்தலின்போது அக்கட்சி 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.