Home /News /national /

கோவாவில் கணக்கை தொடங்கியது ஆம் ஆத்மி... 2 தொகுதிகளில் வெற்றி

கோவாவில் கணக்கை தொடங்கியது ஆம் ஆத்மி... 2 தொகுதிகளில் வெற்றி

'கோவாவில் நேர்மையான அரசியல் தொடங்கியுள்ளது' என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

'கோவாவில் நேர்மையான அரசியல் தொடங்கியுள்ளது' என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

'கோவாவில் நேர்மையான அரசியல் தொடங்கியுள்ளது' என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    கோவா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக 2 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் அசாதாரண வெற்றி பெற்று ஆட்சி அமைக்க  உள்ள நிலையில், கோவாவில் கணக்கை தொடங்கியிருப்பது ஆம் ஆத்மி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தெற்கு கோவா பகுதியில் உள்ள வெலிம் மற்றும் பெனாலிம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 2017-ல் இங்கு முதன்முறையாக ஆம் ஆத்மி போட்டியிட்டபோது ஒரு இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.

    இதையும் படிங்க - பஞ்சாப்பில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனை படைத்த ஆம் ஆத்மி!!

    பெனாலிம் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் வென்சி விகாஸ், முன்னாள் முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான சர்ச்சில் அலிமாவோவை 1,271 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். வெலிம் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் க்ரூஸ் சில்வா, 169 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சாவியோ டி சில்வாவை வீழ்த்தினார்.

    இதையும் படிங்க - Bhagwant Mann : காமெடி நடிகராக வாழ்க்கையை தொடங்கி பஞ்சாபின் முதல்வராகப் போகும் பக்வாந்த் மன்...

    இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'கோவாவில் நேர்மையான அரசியல் தொடங்கியுள்ளது' என்று கூறியுள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராகுல் மாம்ரே கூறுகையில், '2027-ல் மிகப்பெரிய அளவில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு, இந்த தேர்தல் வெற்றி அடிப்படையாக அமைந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் கணிசமான இடங்களைக் கைப்பற்றினோம். தற்போது வெற்றி பெற்ற 2 தொகுதிகளிலும் எங்களது தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். அரசியலில் 20 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்டவரை வெலிம் தொகுதியில் நாங்கள் வீழ்த்தியுள்ளோம். எங்களது உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினராக செயல்படுவார்கள்' என்றார்.

    கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 2 இடங்களிலும், ஆம் ஆத்மி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 3 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளார்கள். இங்கு ஆட்சியமைப்பதற்கு பாஜக உரிமை கோரியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Election 2022

    அடுத்த செய்தி