ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண்களுக்கு ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்படும்... அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி

பெண்களுக்கு ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்படும்... அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி

பெற்றோருக்கு வருமானம் இல்லாததால், சில பெண்களால் கல்லூரிகளில் சேர முடியாமல் போய்விடுகிறது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரும்போது சிறிய அளவிலான தேவைகளுக்கு பெற்றோரையும், கணவரையும் பெண்கள் சாராமல் இருக்கும் நிலையை உருவாக்குவோம். - கெஜ்ரிவால்

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கோவா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

  சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் மட்டுமே பேசப்பட்டு வந்த ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப், உத்தரப்பிரதேசம் என அடுத்தடுத்து மாநில தேர்தல்களில் களம் கண்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கோவா சட்டமன்ற தேர்தலுக்கு ஆம் ஆத்மி தயாராகி வருகிறது. இங்கு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபையில், பாஜக மற்றும் அதன் ஆதரவு உறுப்பினர்கள் 27 பேர் உள்ளனர். தேர்தலையொட்டி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள நிலையில், மக்களை ஈர்க்கும் விதமாக சில அறிவிப்புகளை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

  இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது-

  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 18 வயதைத் தாண்டிய பெண்கள் அனைவருக்கும், மாதம்தோறும் 1000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதுபோன்ற நடவடிக்கையை உலகில் எந்த அரசும் செய்யவில்லை. பெண்களை பொருளாதார ரீதியில் சுதந்திரம் உடையவர்களாக மாற்ற வேண்டும். அதுதான் அவர்களை உண்மையாக சக்திபடுத்துவதாகும்.

  Also Read : பசுவின் வயிற்றில் இருந்து 77 கிலோ ஐஸ்கிரீம் கப்ஸ் மற்றும் ஸ்பூன்கள் அகற்றம்!

  பெற்றோருக்கு வருமானம் இல்லாததால், சில பெண்களால் கல்லூரிகளில் சேர முடியாமல் போய்விடுகிறது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரும்போது சிறிய அளவிலான தேவைகளுக்கு பெற்றோரையும், கணவரையும் பெண்கள் சாராமல் இருக்கும் நிலையை உருவாக்குவோம்.

  22,000 கோடி ரூபாய்க்கு கோவா பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதில் ஊழலை ஒழித்தால் 4,000 கோடி ரூபாய் மிச்சமாகும். அதன் மூலம் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலைவாய்ப்பு, பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படும். இதற்கு 1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு ஏற்படாது.

  Also Read : ஊடுருவல்காரர்கள் என நினைத்து துப்பாக்கிச்சூடு... நாகலாந்தில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழப்பு

  கோவாவில் மற்ற கட்சிகள் கூட்டணியைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன. அவை ஒருபோதும் மாநில வளர்ச்சி, மக்களின் நலனைப் பற்றி பேசுவதே இல்லை. கோவாவின் வளங்களை எப்படி சுரண்டலாம் என்ற நோக்கத்தில்தான் மற்ற கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, Goa