Home /News /national /

கோவாவில் எம்எல்ஏக்களை ரிசார்ட்டுக்கு அனுப்பும் காங்கிரஸ்... குதிரை பேரத்தால் கவலை

கோவாவில் எம்எல்ஏக்களை ரிசார்ட்டுக்கு அனுப்பும் காங்கிரஸ்... குதிரை பேரத்தால் கவலை

Congress

Congress

எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்பதால், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வகையில் குதிரை பேரம் தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

    கோவா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் வெளியாகவுள்ள நிலையில், குதிரைபேரம் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் கட்சி எம்எல்ஏக்களை தக்க வைக்கும் நடவடிக்கையாக அவர்களை ரிசார்ட்டுக்கு அனுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    கோவா சட்டமன்றத்தில் மொத்தம் 40 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு ஆட்சியமைப்பதற்கு ஒரு கட்சிக்கு குறைந்தது 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துள்ளன.

    கோவாவில் கடந்த மாதம் 14-ம்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. நாளை மறுதினம் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    இதையும் படிங்க - கோவாவில் தொங்கு சட்டமன்றம்- தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

    இதில், பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் அதிகபட்சமாக 16,17 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஆட்சியை பிடிப்பதற்கு இவ்விரு பெரும் கட்சிகளுக்கு கூடுதலாக 4-5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும்.

    எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்பதால், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வகையில் குதிரை பேரம் தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இதுகுறித்து கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், 'எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்குவதற்கு முடிவு செய்துள்ளோம். பாஜகவுக்கு எதிரான எந்தக் கட்சியாக இருந்தாலும் அதனுடன் கூட்டணி வைக்க நாங்கள் தயார். கோவா களத்தில் நாங்கள் ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரசுடனும் கூட்டணி அமைக்க எங்களுக்கு சம்மதம்' என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க - உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பா.ஜ.க - கருத்துக் கணிப்பில் தகவல்

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை தொடர்ந்து, கோவாவில் சிறிய கட்சி எம்எல்ஏ வேட்பாளர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், டிகே. சிவக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Election 2022

    அடுத்த செய்தி