Home /News /national /

சாமி சத்தியமா கட்சி தாவ மாட்டோம்... கோயிலிலும், தர்காவிலும் வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்கிய காங்கிரஸ் கட்சி..

சாமி சத்தியமா கட்சி தாவ மாட்டோம்... கோயிலிலும், தர்காவிலும் வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்கிய காங்கிரஸ் கட்சி..

Election 2022 | வேட்பாளர்களை கோயிலில் சத்தியம் செய்ய வைத்த பின்னால்தான் கோவா காங்கிரஸ் ஓரளவு நிம்மதியாக தேர்தல் வேலையை பார்க்கக் கிளம்பியுள்ளது.

Election 2022 | வேட்பாளர்களை கோயிலில் சத்தியம் செய்ய வைத்த பின்னால்தான் கோவா காங்கிரஸ் ஓரளவு நிம்மதியாக தேர்தல் வேலையை பார்க்கக் கிளம்பியுள்ளது.

Election 2022 | வேட்பாளர்களை கோயிலில் சத்தியம் செய்ய வைத்த பின்னால்தான் கோவா காங்கிரஸ் ஓரளவு நிம்மதியாக தேர்தல் வேலையை பார்க்கக் கிளம்பியுள்ளது.

    கோவாவில் தங்களது வேட்பாளர்களிடம் கட்சி தாவ மாட்டோம் என கோயிலிலும், தர்காவிலும் காங்கிரஸ் கட்சி சத்தியம் வாங்கியுள்ளது.

    கோவாவில் சட்டமன்றத் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள். பரப்புரையை தொடங்கும் முன் சாமி கும்பிடலாம் என இந்த மகாலட்சுமி கோயிலுக்கு இவர்கள் வரவில்லை... சத்தியம் செய்ய வந்திருக்கிறார்கள்... "ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் எந்த கட்சிக்கும் தாவி ஓடிப் போய்விட மாட்டேன்... இது மகாலட்சுமி மீது சத்தியம்" என இந்த வேட்பாளர்களை கோயிலில் சத்தியம் செய்ய வைத்த பின்னால்தான் கோவா காங்கிரஸ் ஓரளவு நிம்மதியாக தேர்தல் வேலையை பார்க்கக் கிளம்பியுள்ளது.

    Also read... இந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி!

    இதற்கு காரணம் இல்லாமல் இல்லை... கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களில் வென்று அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக ஒளிர்ந்தது காங்கிரஸ். 5 ஆண்டுகள் முடியும் நிலையில் தற்போது வெறும் 2 எம்எல்ஏக்கள்தான் கை அசைத்துக் கொண்டு காங்கிரசில் இருக்கிறார்கள்...

    மற்ற அனைவரும் கை நீட்டி லிப்ட் கேட்டு கிடைத்த கட்சியில் ஐக்கியமாகி விட்டார்கள். அதிலும் 2019ல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜகவின் தாமரை பூவை சூடி கட்சி தாவிப் போனார்கள்... அரும்பாடுபட்டு எம்எல்ஏ ஆக்கினால் இப்படி ஆளாளுக்கு கோடிகளோடு ஓடிப்போவதை எண்ணி கவலைப்பட்ட காங்கிரஸ் அதை தடுக்க கையாண்டுள்ள புதிய டெக்னிக்தான் இந்த சத்தியம். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களோடு பனாஜியில் உள்ள மகாலட்சுமி கோயிலுக்கு சென்று வேட்பாளர்கள் சத்தியம் செய்தனர்.


    கட்சி மாறவே கவலைப்படாதவர்கள் கடவுளை கூட மாற்றி விடுவார்களோ என சந்தேகப்பட்டார்களோ என்னவோ, கிறிஸ்தவர்களின் புனித சிலுவை முன்பாகவும், தர்காவிற்கு கூட்டிச் சென்றும் சத்தியம் செய்ய வைத்திருக்கிறார்கள்.

    வேட்பாளர்கள் இப்படி சத்தியம் செய்வதால் இவர்களை நம்பி ஓட்டுப் போடலாம் என மக்கள் நினைப்பார்கள் என்கிறார் கோவா காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் கிரிஷ் சடோன்கர். கொட்டும் கோடிகளா.. கடவுள் சத்தியமா... எது நிலைக்கும் என்பதை தேர்தலுக்கு பின்பான நிகழ்வுகளே தீர்மானிக்கும்.

    Also read:   கொரோனா முடிவுக்கு வருகிறது - சுகாதார வல்லுநர்கள் ஹேப்பி நியூஸ்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Election 2022, Goa

    அடுத்த செய்தி