Home /News /national /

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவனையில் அனுமதி

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவனையில் அனுமதி

மனோகர் பாரிக்கர்

மனோகர் பாரிக்கர்

  • News18
  • Last Updated :
    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கோவா மாநிலத்தின் முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் கரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் அவர், அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இந்தியா வந்த அவருக்கு மீண்டும் கடந்த மார்ச் மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மீண்டும் அமெரிக்கா சென்று  சிகிச்சை முடிந்து கடந்த வாரம்தான் அவர் இந்தியா திரும்பினார்.

    இந்நிலையில் நேற்று மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை, கோவா மாநில துணை சபாநாயகரும் பாஜக எம்எல்ஏ-வுமான மைக்கேல் லோபோ மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர்காளிடம் பேசிய அவர், மனோகர் பாரிக்கர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Goa cm, Hospital, Manohar parrikar

    அடுத்த செய்தி