• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்!

பிரமோத் சாவந்த்

பிரமோத் சாவந்த்

கோவா முன்னணி கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் மற்றும் மஹாராஷ்டிராவாடி கோமன்தங் கட்சி எம்.எல்.ஏ சுதின் தாவலிகர் ஆகிய இருவருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கி அவர்கள் கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவையும் பா.ஜ.க பெற்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கோவா மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் முதல்வர் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்றுள்ளார். அதனையடுத்து, அவர் முதல்வராக தொடர்வதில் இருந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

    கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் காலமானதை தொடர்ந்து, அம்மாநில சட்டமன்ற சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த் முதல்வராக பொறுப்பேற்றார். அதிக உறுப்பினர்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

    கோவாவில் மொத்தமுள்ள 40 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கரின் தொகுதியைச் சேர்த்து 5 தொகுதிகள் காலியாக உள்ளன. பா.ஜ.க.வுக்கு 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ்க்கு 14 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

    கோவா முன்னணி கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் மற்றும் மஹாராஷ்டிராவாடி கோமன்தங் கட்சி எம்.எல்.ஏ சுதின் தாவலிகர் ஆகிய இருவருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கி அவர்கள் கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவையும் பா.ஜ.க பெற்றது.

    இதையடுத்து பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்தது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் கோரிக்கை விடுத்தார்.

    அதனையடுத்து, இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் 11 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் மற்றும் சிறிய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் ஆதரவோடு சேர்த்து மொத்தம் 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்றார். அதனால், பிரமோத் சாவந்த் முதல்வராக நீடிப்பதில் இருந்த பிரச்னை நீங்கியது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: