குடும்பத்துக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்க கோவா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவா மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ள பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில், ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 3 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
கோவா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 20 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.தொடர்ந்து, திங்கட்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக முதல்வராக பிரமோத் சாவந்த் பொறுப்பேற்றார்.
அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக 8 பேர் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டமும் நடைபெற்றது.
இதையும் படிங்க - 'காங்கிரஸ் கட்சி பலம் அடைய மனதார வாழ்த்துகிறேன்' - பாஜக அமைச்சர் நிதின் கட்கரி
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையில், தாங்கள் அட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தோம்.
தற்போது அதனை நிறைவேற்றும் விதமாக வரும் புதிய நிதியாண்டு முதல் 3 ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச கேஸ் சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.