• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இன்று கோவாவில் பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு!

இன்று கோவாவில் பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு!

பிரமோத் சாவந்த்

பிரமோத் சாவந்த்

இந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவாவில் பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று காலை பதினொன்று முப்பது மணிக்கு நடைபெற உள்ளது.

கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் காலமானதை தொடர்ந்து, அம்மாநில சட்டமன்ற சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த் முதல்வராக பொறுப்பேற்றார். அதிக உறுப்பினர்களை கொண்ட தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்தது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் கோரிக்கை விடுத்தார்.

பாரிக்கருடன் பிரமோத் சாவந்த்


இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜகவிற்கு ஆளுநர் அனுமதி அளித்தார். இதற்காக கோவா சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று காலை 11:30 மணிக்கு கூட உள்ளது.

மொத்தம் 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டமன்றத்தில் தற்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 36 ஆக உள்ளது. பாஜகவிற்கு 12 உறுப்பினர்களும், அதன் கூட்டணி கட்சிகளான கோவா முன்னேற்றக் கட்சி மற்றும் மஹாராஷ்ட்ரவாதி கோமந்தக் கட்சி ஆகியவைகளுக்கு தலா 3 உறுப்பினர்களும், பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் உள்ளனர்.

இதனால் பாஜக கூட்டணிக்கு 21 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் உள்ளார். எனவே இந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்து இங்கே கிளிக் செய்து காண்க.

Also see... ஈழத்தமிழர்களுக்காக ஐ.நா.வில் நடிகர் கருணாஸ் உரை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: