Home /News /national /

பாஜகவிலிருந்து அமைச்சர் திடீர் ராஜினாமா - கட்சி மீது பகிரங்க குற்றச்சாட்டு!

பாஜகவிலிருந்து அமைச்சர் திடீர் ராஜினாமா - கட்சி மீது பகிரங்க குற்றச்சாட்டு!

BJP

BJP

Goa Assembly elections 2022 | மைக்கேல் லோபோவின் ராஜினாமாவை அடுத்து கோவா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 24 ஆக குறைந்துள்ளது.

    கோவா மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    கோவா மாநிலத்தில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளை உள்ளடக்கிய கோவா மாநிலத்துக்கு வரும் பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. பாஜக, காங்கிரஸ், எம்.ஜி.பி, கோவா முன்னணி கட்சி, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோவாவின் முக்கிய அரசியல் கட்சிகளாக விளங்கி வருகின்றன.

    கோவாவில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவா மாநில அமைச்சராக இருந்து வந்த மைக்கேல் லோபோ இன்று திடீரென தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்வதாக முதல்வர் அலுவலகத்துக்கும், சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் பாஜகவில் இருந்தும் விலகுவதாகவும் மைக்கேல் லோபோ அறிவித்துள்ளார்.

    Also read:  43வயது மெக்கானிக்கை கொலை செய்து ஆண் உறுப்பை வெட்டி சாப்பிட்ட ஆசிரியர்

    செய்தியாளர்களிடையே பேசிய மைக்கேல் லோபோ, பாஜக இனி சாமானியர்களின் கட்சி அல்ல என்று வாக்காளர்கள் என்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்பேன் எனவும், சில கட்சிகளுடன் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார். நான் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் வகையில் செயல்படுவேன் எனவும் குறிப்பிட்டார்.

    சமீப காலமாக கட்சிக்கெதிராக பேசி வந்த மைக்கேல் லோபோ, முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் விசுவாசிகள் பாஜகவில் ஓரங்கட்டப்படுவதாக தெரிவித்தார். மைக்கேல் லோபோ காங்கிரஸ் கட்சியில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்து வரும் மைக்கேல் லோபோவின் மனைவி தெலிலா லோபோவுக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் பாஜகவில் இருந்து வெளியேறுவதாகவும் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.

    Also read:  பாறை சரிந்து படகில் சென்ற சுற்றுலா பயணிகள் மீது விழுந்த கோர சம்பவம் - 10 பேர் பலி - வீடியோ

    மைக்கேல் லோபோவின் ராஜினாமாவை அடுத்து கோவா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 24 ஆக குறைந்துள்ளது.

    மைக்கேல் லோபோவின் வெளியேற்றத்தை தொடர்ந்து கோவாவின் பர்தேஷ் பகுதியில் கணிசமான அளவு கிறிஸ்துவர்களின் வாக்கை பாஜக இழக்கக் கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக சங்கேம் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ பிரசாத் கோன்கர், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Arun
    First published:

    Tags: BJP, Congress, Goa

    அடுத்த செய்தி