Home /News /national /

கோவா: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் முந்தும் கட்சி எது?

கோவா: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் முந்தும் கட்சி எது?

பா.ஜ.க, காங்கிரஸ்

பா.ஜ.க, காங்கிரஸ்

கோவாவின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜ.க, காங்கிரஸ் சமபலத்தில் உள்ளன.

    உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. உத்தரப் பிரதேசத்துக்கான ஏழாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளநிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட கோவாவில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது.

    2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் பிற எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இந்தமுறை பெரும்பான்மையை பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக பா.ஜ.க உழைத்தது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸும் தீவிரமாக பணியாற்றியது. இந்தநிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

    சி.என்.எக்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் கோவா மாநிலத்தில் பா.ஜ.க அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, பா.ஜ.க 16 - 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 11 - 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் பிற கட்சிகளில் 5 - 7 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    பி - மார்க்யூ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் கோவாவில் பா.ஜ.கவும், காங்கிரஸும் சமபலத்தில் உள்ளன. அதன்படி, பா.ஜ.க 13 - 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 - 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 2 - 6 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 2 -4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    ஜன் கி பாத் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் கோவாவில் பா.ஜ.கவும், காங்கிரஸ் கட்சியும் சமபலத்தில் உள்ளன. அதன்படி, பா.ஜ.க 13 - 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 - 19 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 4 - 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    உத்ரகாண்ட்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

    வீடூ கருத்துக் கணிப்பின்படி கோவாவில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதன்படி, பா.ஜ.க 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    கருத்துக்கணிப்பு முடிவுகளை  ShareChat-லும் தெரிந்துகொள்ளலாம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Election 2022, Goa

    அடுத்த செய்தி