கோவாவில் பாஜகவுக்கு தாவிய 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

பாஜகவுக்கு தாவிய எம்.எல்.ஏ.க்களில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் கவ்லேகரும் ஒருவராவார்.

news18
Updated: July 11, 2019, 7:51 AM IST
கோவாவில் பாஜகவுக்கு தாவிய 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!
பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
news18
Updated: July 11, 2019, 7:51 AM IST
கோவா மாநிலத்தில் 15 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், 10 பேர் ஆளும் பாஜகவுக்கு தாவியுள்ளனர்.

கோவா மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் மறைந்ததை அடுத்து புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். காங்கிரசை விட குறைந்த எம்.எல்.ஏ.க்களை கொண்ட பாஜக சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உதவியுடன் ஆட்சியில் இருந்து வந்தது.

இந்த நிலையில், காங்கிரசில் இருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் திடீரென பாஜகவில் இணைந்துள்ளனர். மொத்த பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறினால், அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாது என்பதால், அவர்கள் விரைவில் பாஜக எம்.எல்.ஏ.க்களாக சபாநாயகரால் அங்கீகரிக்கப்படுவார்.


பாஜகவுக்கு தாவிய எம்.எல்.ஏ.க்களில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் கவ்லேகரும் ஒருவராவார். கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா படலம் தொடரும் நிலையில், கோவாவிலும் அக்கட்சிக்கு விழுந்துள்ள இந்த அடி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...