பெங்களூருக்கு வருகை தந்த இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கர்நாடக வாழ் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 'தி இந்து' நாளிதழ் சார்பில் இரண்டு நாள் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் இருந்து ராஜபக்சே பெங்களூருக்கு வருகை தந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு சுதந்திர பூங்கா அருகே கர்நாடகாவில் உள்ள தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'கோ பேக் ராஜபக்சே' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mahinda Rajapakse