Home /News /national /

இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த உலக அளவில் முயற்சி... பிரதமர் மோடி குற்றச்சாட்டு

இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த உலக அளவில் முயற்சி... பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவுக்கு எதிராகப் பரப்பப்படும் வதந்திகளை எதிர்த்துப் போராடுவது நம் அனைவரின் பொறுப்பு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    உலக அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சிகள் நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

    சுதந்திர இந்தியாவின் 75-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரம்ம குமாரிகளுக்கான பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய அவர், இந்தியாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்க நடக்கும் முயற்சிகளை வெறும் அரசியலாக மட்டும் பார்க்க முடியாது என்றார். பிரம்ம குமாரிகள் அமைப்பு இந்தியாவின் பெருமையை பல்வேறு நாடுகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

    இதையும் படிங்க : கொரோனா 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு

    இந்தியாவுக்கு எதிராகப் பரப்பப்படும் வதந்திகளை எதிர்த்துப் போராடுவது நம் அனைவரின் பொறுப்பு என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.

    குஜராத்தின் சோம்நாத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்துவைத்தார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேல், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க : கேரளாவில் உச்சத்தில் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 46 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!

    இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சோம்நாத் சுற்றுலா மாளிகை திறக்கப்பட்டிருப்பதற்கு, குஜராத் அரசு, சோம்நாத் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார். நூற்றுக்கணக்கான ஆண்டு அடிமையாக இருந்த காலகட்டங்கள் மற்றும் இந்திய நாகரீக பயணத்தில் எழுந்த சவால்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், சோம்நாத் கோயில் இடிக்கப்பட்ட சூழல் மற்றும் இந்த கோயில் சர்தார் பட்டேலின் முயற்சிகளால் புனரமைக்கப்பட்ட சூழல் ஆகிய இரண்டிலும் பெரும் தகவல் அடங்கியுள்ளது என்றார்.

    தற்போது, சுதந்திரப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில், நமது கடந்த கால அனுபவங்கள், கலாச்சார பெருமைமிக்க இடங்கள் மற்றும் சோம்நாத் போன்ற நம்பிக்கைக்குரிய இடங்களிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார்.

    ஆன்மீக தலங்களின் சிறப்பை எடுத்துரைக்கும் மெய்நிகர் பாரத் தர்ஷன் பற்றி விளக்கிய பிரதமர், சோம்நாத், துவாரகா, கட்ச் வளைகுடா, குஜராத்தின் ஒற்றுமைச் சிலை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி, மதுரா, காசி, பிரயாக், குஷிநகர்; தேவபூமியான உத்தராகண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத்; இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஜூவாலாதேவி, நயினா தேவி, பக்தி மற்றும் இயற்கை எழில் மிகுந்த ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலங்கள், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், ஒடிசாவில் உள்ள பூரி; ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருப்பதி பாலாஜி, மகாராஷ்டிராவின் சித்தி விநாயகர், கேரளாவின் சபரிமலை போன்ற புனிதத் தலங்களை பட்டியலிட்டார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Modi

    அடுத்த செய்தி