ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஒரே நாளில் ரூ.7,112 கோடி இழப்பு.. உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் அதானிக்கு பின்னடைவு..!

ஒரே நாளில் ரூ.7,112 கோடி இழப்பு.. உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் அதானிக்கு பின்னடைவு..!

கவுதம் அதானி

கவுதம் அதானி

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

புளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அதானிக்கு, நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 112 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதால், மொத்த சொத்து மதிப்பு 9 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதனால், சிறிய வித்தியாசத்தில், அதானியை முந்திய அமேசான் நிறுவனர் Jeff Bezos 3-வது இடத்திற்கு முன்னேறினார்.

கொரோனா காலத்தில் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு குறைந்த நிலையில், அதானியின் சொத்து மதிப்பு 13 மடங்கு உயர்ந்தது.கடந்த செப்டம்பர் மாதம் 12.6 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய அதானியின் சொத்து மதிப்பு, கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) 15.3 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், 12.6 லட்சம் கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள எலான் மஸ்க் (Elon Musk)இரண்டாது இடத்திலும் நீடிக்கின்றனர். 9 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள Bill Gates 5வது இடத்தில் தொடர்வதாகவும் புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Adani, Billionaires