அறிக்கை தருவதெல்லாம் சரி, ராமர் கோவிலை எப்படி கட்டுவீர்கள்?

கோப்புப்படம்

அயோத்தி விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் நிலையில், ராமர் கோவிலை கட்ட அவசரச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டு வரும் என்றாலும், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டால், ஒட்டுமொத்த பட்ஜெட் கூட்டத்தொடரும் இவ்விவகாரத்தால் முடங்க வாய்ப்பு உள்ளது.

அயோத்தி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள், பா.ஜ.க அமைச்சர்கள், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.

ராமர் கோவிலை எப்படி கட்டப்போகிறார்கள்? அரசுக்கு சட்ட ரீதியான வசதிகள் என்ன இருக்கிறது? என்ற கேள்விகள் இதில் எழுந்துள்ளது. அயோத்தி விவகாரத்தில் அவசரச்சட்டம் என்ற இக்கட்டான நிலையில் அரசு இருக்கும் போது, அரசில் இருந்தே ஒரு குழு இந்தப் பிரச்னையை தீர்க்க பொதுவான வழியை தேடிக்கொண்டிருக்கிறது.

சர்ச்சைக்குரிய இடம்


எந்த ஒரு அவசரச்சட்டமும் இல்லாமல் ராமர் கோவிலை கட்டுவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டாலும், பா.ஜ.க.வுக்கு வரும் தேர்தல்களில் அது சாதகமாகவே இருக்கும் என்று அந்தக் குழு கருதுகிறது. அரசியல் சாசன சட்ட நிபுணர்கள் கூட அந்தக் குழுவின் கருத்துக்கு ஆதரவாக உள்ளனர்.

அரசியல் சாசன நிபுணர் சுபாஷ் காஷ்யப் நம்பப்படுவதைப் போல, பிரச்னைக்குரிய நிலத்தில் எப்போது வேண்டுமானாலும், விரும்பும்போது கோவிலுக்கான கட்டுமானத்தை அரசு தொடங்கலாம். ஆனால், அதற்கு முன்னதாக நிலத்தை, கோவில் கட்டும் குழுவிடம் மாற்ற வேண்டும். கோவில் கட்டுவதற்கான பணிகளை தொடங்கிய பின்னர், விருப்பப்பட்டால் அவசரச்சட்டம் கொண்டு வரலாம். இல்லையெனில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கலாம்.

அவசரச்சட்டம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் எம்.எல். லஹோதிக்கு வேறு விதமான பார்வை உள்ளது. “ஒரு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது, அதில் அவசரச்சட்டம் கொண்டு வருவதிலிருந்து அரசு விலகியே இருக்க வேண்டும்” என்று அவர் கூறுகிறார். எனினும், அவசரச்சட்டத்தை எப்போது வேண்டுமானாலும் கொண்டு வருவதற்கு அதிகாரம் உள்ளது என்றும் லஹோதி தெரிவித்துள்ளார்.அரசாங்கத்திடம் இருந்து வரும் தகவல்களை பார்த்தால் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடக்கும் பட்ஜெட் கூட்டத்துக்கு பின்னரே அவசரச்சட்டம் கொண்டு வரலாம் என்றே தெரிகிறது. ஏனெனில், சர்ச்சைக்குரிய டிசம்பர் 6-ம் தேதிக்கு முன்னதாக அவசரச்சட்டம் கொண்டு வந்தால், ஒட்டுமொத்த பட்ஜெட் கூட்டத்தொடரும் இந்த விவகாரத்தால் கூச்சல், குழப்பத்திலேயே முடிந்துவிடும் என்று அரசு கருதுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர் அவசரச்சட்டம் கொண்டு வந்தாலும் அது பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வந்துவிடும். ஆனால், அவசரச்சட்டம் மூலமாக ராமர் கோவிலை கொண்டுவருவது எளிதான காரியமில்லை, பல சோதனைகளை அரசு சந்திக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையில் அரசு எப்படி நகர்ந்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் ஸபார்யப் ஜிலானி தயாராகவே உள்ளார். அயோத்தியில் எந்தவிதமான கட்டுமானங்களும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று கூறும் அவர், பிரச்னைக்குரிய நிலத்தில் அரசு கை வைத்தால், உச்ச நீதிமன்றம் செல்ல தயாராகவே உள்ளார்.

- அனில் ராய்

Also See..

Published by:Sankar
First published: