கொல்கத்தாவில் மருத்துவ உடைக்கு பதிலாக ரெயின்கோர்ட் வழங்கிய அரசு: போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்

கொல்கத்தாவில் மருத்துவ உடைக்கு பதிலாக ரெயின்கோர்ட் வழங்கிய அரசு: போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்
கோப்புப் படம்
  • Share this:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மழைக்கு அணியும் ரெயின் கோர்டை உடையாக அளித்தால் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகள் தற்போது கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. இந்தக் கடுமையான சூழலிலும் இரவு பகல் பாராமல் வேலை செய்யும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முகக் கவசம், தனிப்பட்ட பாதுகாப்பு உடைகள் போதுமான அளவில் இல்லை என்று மருத்துவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பி.பி.இ எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உடைக்கு பதிலாக மழை காலத்தில் அணியும் ரெயின் கோர்டை(raincoats) பயன்படுத்தச் சொல்லியுள்ளனர். கொல்கத்தாவிலுள்ள முக்கிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கூட இந்த அவலம் நடைபெற்றுள்ளது.

அதனால், அதிருப்தியடைந்த மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தெரிவித்த வைராலஜிஸ்ட் அமிதபா நந்தி, ‘ரெயின்கோர்ட் பயன்படுத்துவதன் மூலமும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதன் மூலம் வைரஸ் பரவலைத் தடுக்க முடியும். ஆனால், அந்த ரெயின்கோர்ட்கள், கழுத்து தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளை முழுவதும் மூடும் வகையில் இருக்கவேண்டும். மூடிய அறைக்குள் கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சையளித்தால் 5 மணி நேரத்தில் அந்த ரெயின்கோர்ட்டை மாற்றியிருக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். உடனடியாக மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்யவேண்டும் அல்லது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துவருகின்றனர்.


Also see:
First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading