Home /News /national /

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஆணுறை கொடுத்து ஒத்துழைப்பு அளியுங்கள்! இயக்குநர் சர்ச்சைக் கருத்து

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஆணுறை கொடுத்து ஒத்துழைப்பு அளியுங்கள்! இயக்குநர் சர்ச்சைக் கருத்து

டேனியல் ஷர்வன்

டேனியல் ஷர்வன்

  • News18
  • Last Updated :
    பாலியல் வன்கொடுமை செய்யும்போது ஆணுறை கொடுத்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சினிமா இயக்குநர் டேனியல் ஷர்வன் தெரிவித்துள்ளார்.

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துவருகின்றன.

    இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து தன்னை சினிமா இயக்குநர் என்று அறிவித்துக்கொள்ளும் டேனியல் ஷர்வன் என்பவரது ஃபேஸ்புக் பதிவு சர்ச்சையாகியுள்ளது.

    வன்முறையற்ற பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பிலான அவருடைய பதிவில், ‘பாலியல் வன்கொடுமை ஒன்றும் மோசமான ஒன்று இல்லை. ஆனால், கொலை ஏற்றுக்கொள்ளமுடியாதது. பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதால்தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படும் பெண்களைக் கொலை செய்கிறார்கள்.

    வன்முறையற்ற பாலியல் வன்கொடுமை என்பதன் மூலமே பாதிக்கப்படும் பெண்களை, கொடூரமாக கொல்லப்படுவதிலிருந்து பாதுகாக்க ஒரே வழி. பெண்கள் மீது நடைபெறும் வன்முறைக்கு சமூகம் மற்றும் பெண்கள் அமைப்புகள்தான் முக்கிய குற்றவாளிகள்.

    நிர்பயா சட்டம் வன்முறையான பாலியல் வன்கொடுமையைக் கட்டுப்படுத்தாது. அதனால், பெண்கள்தான் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பெண்கள், கையோடு ஆணுறைகளை எடுத்துச் செல்லுங்கள். பாலியல் வன்கொடுமை செய்பவர்களிடம் கொடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள்.

    கொலையை விட பாலியல் வன்கொடுமை என்பது மோசமான ஒன்று. கொலை என்பது பாவம். ஆண்களுக்கு பாலியல் ஆசை தன்னிறைவு அடையும்போது அவர்கள் பாதிக்கப்படும் பெண்களைக் கொலை செய்யமாட்டார்கள்.

    பாலியல் வன்கொடுமைதானே என்று காவல்துறையும், பெண்கள் அமைப்பும் பாலியல் வன்கொடுமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும்போது, பாதிக்கப்படும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் விட்டுவிடுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    டேனியல் ஷர்வனின் ஃபேஸ்புக் பதிவிற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.



    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Rape case

    அடுத்த செய்தி