கேரளாவில் செல்பி எடுக்கும் முயற்சியில் ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 10ம் வகுப்பு மாணவியின், உடல் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று மீட்கப்பட்டது.
கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவியான அபர்ணா. இவர் தனது தோழியை சந்திக்க பத்தனாபுரம் வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவரது வீட்டின் அருகில் உள்ள கல்லடையாற்றில் அபர்ணா, அனுக்கிரகா மற்றும் அவரது தம்பி அபினவும் சென்றுள்ளனர்.
இதனிடையே மூவரும் ஆற்றுக்குள் இறங்கி செல்பி, மற்றும் வீடியோக்கள் எடுத்து மகிழ்ந்துள்ளனர். அப்போது, செல்பி எடுத்துக்கொண்டிருந்த போது ஆற்றுக்குள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களில் அலறல் சத்தம் கோட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பாறைகளுக்கு இடையே மாட்டி இருந்த அனுக்கிரஹா மற்றும் அபினவ்வை அதிர்ஷ்டவசமாக மீட்ட நிலையில், அபர்ணாவை பொதுமக்களும், தீயணைப்பு துறையினரும் தொடர்ந்து தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் உயிரற்ற நிலையில், அபர்ணா மீட்கப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Selfie death