ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்... மாணவியை சரமாரியாக குத்தி கொலை செய்த மாணவர்.. பெங்களூரில் கொடூர சம்பவம்!

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்... மாணவியை சரமாரியாக குத்தி கொலை செய்த மாணவர்.. பெங்களூரில் கொடூர சம்பவம்!

மாணவி கொலை

மாணவி கொலை

லியாஸ்மிதா என்ற மாணவி, வேறு கல்லூரியைச் சேர்ந்த பவன் கல்யாண் என்ற மாணவரின் காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bangalore, India

பெங்களூருவில் 19 வயது மாணவி கல்லூரி வளாகத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பிரசிடென்சி கல்லூரியில் படித்து வந்த லியாஸ்மிதா என்ற மாணவி, வேறு கல்லூரியைச் சேர்ந்த பவன் கல்யாண் என்ற மாணவரின் காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், பிரசிடென்சி கல்லூரிக்குச் சென்ற அந்த மாணவர், மாணவி லியாஸ்மிதாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இதையடுத்து, கல்லூரி காவலாளிகள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், மாணவி முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மாணவியை குத்திவிட்டு, தற்கொலைக்கு முயன்ற பவன் கல்யாண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

First published:

Tags: College student, Crime News, Girl Murder