ஆந்திராவில் காதலனுக்கு செல்ஃபி வீடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்..

கோப்புப்படம்.

ஆந்திர மாநிலத்தில் காதலன் தன்னுடன் பேச மறுத்ததால் விரக்தி அடைந்த இளம்பெண் தான் துாக்கிட்டுத் தற்கொலை செய்வதை லைவ் வீடியோவாக காதலனுக்கு அனுப்பியபடியே தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

 • Share this:
  ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள வி.வி நகரை சேர்ந்தவர் ரம்யா. அங்குள்ள தனியார் கல்லுாரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவபார்கவ் என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

  கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சிவபார்கவ் திடீரென ரம்யாவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.பலமுறை கெஞ்சியும் நண்பர்கள் மூலம் துாது விட்டும் சிவபார்கவ் பேசாததால், தற்கொலை செய்யும் முடிவு எடுத்தார் ரம்யா.

  வீட்டில் உள்ள கொக்கியில் தனது துப்பட்டாவை மாட்டிய ரம்யா அதை அப்படியே லைவ் வீடியோ பதிவிடத் தொடங்கினார். பின்னர் காதலனுக்கு வாட்ஸ் ஆப்பில் அதை அனுப்பி விட்டு தன்னிடம் ஒரு நிமிடம் மட்டும் பேசினால் போதும் என பலமுறை செய்தி அனுப்பினார்.

  ஆனால் காதலன் சிவபார்கவிடம் இருந்து எந்தப் பதிலும் வராததால், லைவ் வீடியோ பதிவாகிக் கொண்டிருந்த நிலையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

  அறைக்குள் சென்ற ரம்யா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பெற்றோர் கதவைத் தட்டிப் பார்த்தனர். அவர் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்துப் பார்த்தபோது துாக்கில் தொங்கிய நிலையில் ரம்யா சடலமாகக் கிடந்தார்.

  மேலும் படிக்க...

  சாத்தான்குளம் கொலை வழக்கு: 18 ரத்த மாதிரிகள்.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்..

  சடலத்தை மீட்ட போலீசார் சம்பவ இடத்தில் இருந்த அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் வீடியோவும் காதலனுக்கு ரம்யா அனுப்பிய செய்திகளும் இருந்தன. அவற்றின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காதலன் சிவ பார்கவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vaijayanthi S
  First published: