• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பீகாரில் பாலியல் வன்கொடுமை செய்து பெண் எரித்துக் கொலை! ஹைதராபாத்தைத் தொடர்ந்து மற்றொரு கொடூரம்

பீகாரில் பாலியல் வன்கொடுமை செய்து பெண் எரித்துக் கொலை! ஹைதராபாத்தைத் தொடர்ந்து மற்றொரு கொடூரம்

அந்தப் பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் நேற்று இரவு நடைபெற்றிருக்கலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பீகாரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து சுட்டுக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் நேற்று கடுமையாக வாதிட்டனர்.

அந்தச் சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்கு முன்னர் பீகாரில் ஒரு கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலம் பக்சார் மாவட்டம் குகுதா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆறு மணி அளவில் கருகிய நிலையிலுள்ள உடலை பொட்டல்காடு போன்ற பகுதியிலிருந்து காவல்துறையினர் கண்டெடுத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பக்சார் மாவட்டம் பீகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த மாவட்ட இணை கண்காணிப்பாளர், ‘பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கருகிய நிலையில் இருந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய இடுப்புக்கு கீழே முழுவதுமாக எரிந்துள்ளது. அந்தப் பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் நேற்று இரவு நடைபெற்றிருக்கலாம்.

அந்தப் பெண் யார் என்பதும் அவருடைய வயது என்ன என்பதும் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. உடற்கூராய்வு அறிக்கைக்கு பிறகே, அந்தப் பெண் சிறுமியா? பெண்ணா? என்பது தெரியவரும். சிறுமியின் தலையில் ஒரு துப்பாக்கி குண்டு உள்ளது. சுட்டுக் கொலை செய்யப்பட்டு பின்னர் அடையாளங்களை அழிப்பதற்காக அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: