ஹோம் /நியூஸ் /இந்தியா /

நிர்வாண கோலத்தில் இளம்பெண் : 4 கிலோமீட்டர் தூரம் சாலையில் தரதரவென இழுத்து சென்ற கார் - டெல்லியில் கொடூரம்!

நிர்வாண கோலத்தில் இளம்பெண் : 4 கிலோமீட்டர் தூரம் சாலையில் தரதரவென இழுத்து சென்ற கார் - டெல்லியில் கொடூரம்!

விபத்துக்குள்ளான கார்

விபத்துக்குள்ளான கார்

பெண் வந்த ஸ்கூட்டர் மீது மோதிய கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் புத்தாண்டு இரவில் இளம்பெண் விபத்துக்குள்ளாகி சுமார் 4 கிலோமீட்டர்கள் வாகனத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் புத்தாண்டு இரவில் 23 வயதுகொண்ட இளம்பெண் தனது ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த காருடன் அந்த ஸ்கூட்டி விபத்துக்குள்ளானது.

காரில் வந்த 5 பேரும், காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். அப்போது விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது. கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

அப்போது, அந்த பெண்ணின் ஆடை கிழிந்தால், அவர் நிர்வாணமாக இழுத்துசெல்லப்பட்டுள்ளார். இதை பார்த்த ஒருவர் உடனே டெல்லி காவல்துறைக்கு தகவலளித்தார். அதிகாலை சுமார் 3.24 மணிக்கு வந்த இந்த தகவலின் பேரில் காவல்துறை இந்த வாகனத்தை பிடிக்க முயற்சித்தது. ஆனால் கார் வேகமாக சென்றதால் வாகனத்தை கண்டுபிடிக்க அவர்களுக்கு சிக்கலானது.

இதையடுத்து சுமார் 4.11 மணிக்கு காவல்துறைக்கு மற்றொரு அழைப்பு வந்தது. அப்போது, ஒரு இளம்பெண்ணின் உடல் கஞ்சவாலா பகுதியில் நிர்வாணமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அந்த பெண்ணின் உடலை கைப்பற்றியது.

இதற்கிடையில் சுமார் 3.53 மணிக்கு சுல்தான்புரி என்ற இடத்தில் விபத்துக்குள்ளான ஸ்கூட்டி ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அந்த ஸ்கூட்டி, நிர்வாணமாக கிடந்த அந்த பெண்ணினுடையது என தெரியவந்தது.

இதையடுத்து பேசிய காவல்துறையின் அதிகாரி, “அந்த ஸ்கூட்டர் விபத்துக்குள்ளான பிறகு, அந்த பெண்ணின் ஆடை காரில் மாட்டியதால் அவர் 4 கிலோமீட்டர் இழுத்துவரப்பட்டிருக்கிறார். இந்த குற்றத்திற்காக தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன், மித்து, மனோஜ் மிட்டால் என 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவர்கள் குடிபோதையில் இருந்தார்களா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால், “சிலர் காரில் ஒரு பெண்ணை பல கிலோமீட்டர்களுக்கு போதையில் இழுத்து சென்றதாக தெரிவிக்கின்றனர். இது கேட்கவே அதிர்ச்சியாக உள்ளது. இது மிகவும் அபாயமான சம்பவம். நான் டெல்லி காவல்துறைக்கு ஆஜராக சம்மன் அனுப்புகிறேன். உண்மையை அவர்கள் நிச்சயம் வெளிக்கொண்டுவரவேண்டும்” என கருத்து பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Accident, Delhi, Died