Home /News /national /

"ஜீன்ஸ் பேண்ட் அணிய எதிர்ப்பு".. சிறுமியை குடும்பத்தினரே அடித்துக்கொன்ற கொடூரம்!

"ஜீன்ஸ் பேண்ட் அணிய எதிர்ப்பு".. சிறுமியை குடும்பத்தினரே அடித்துக்கொன்ற கொடூரம்!

ஜீன்ஸ் பேண்ட்

ஜீன்ஸ் பேண்ட்

உத்தர பிரதேசத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என 17 வயது சிறுமியை அவரது குடும்பத்தினரே அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தர பிரதேசம் தயோரியா மாவட்டத்தை சேர்ந்தவர் சிறுமி நேஹா பஸ்வான் (17). இவரது தந்தை அமர்நாத் பஸ்வான் பஞ்சாபில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதனால், அமர்நாத்தின் மனைவி தனது குழந்தைகளுடன் மாமனார் குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். அமர்நாத்துக்கு மொத்தம் நான்கு சகோதரர்கள், இவர்கள் அனைவரும் ஒரே வீட்டிலே வாழ்ந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், திங்கட்கிழமையன்று சிறுமி நேஹாவை, அவரது மூன்று பெரியப்பாக்களும், தாத்தாவும் சேர்ந்து அவர்களது துணிகளை துவைத்து கொடுக்கும்படி கேட்டுள்ளனர். இதற்கு சிறுமி நேஹா மறுப்பு தெரிவிக்கவே, அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

    தொடர்ந்து அத்தோடு விடாமல், நேஹாவை ஆடை கட்டுப்பாடுடன் இருக்கும் படி கூறியும், ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது எனக்கூறியும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நேஹாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியை அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், அவர் வழியிலே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் சடலத்தை பட்னாவா பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசிவிட்டு அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

    இதையடுத்து, நேஹாவின் தாய் நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதில், ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என தனது மகளை மாமனார் மற்றும் பெரியப்பாக்கள் சேர்ந்து தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அதனாலே தனது மகள் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதில் தனது மாமனார் உட்பட 10 பேர் மீது அவர் புகார் தெரிவித்துள்ளார்.

    Also read... லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை - புதிய வழக்கு பதிவு..

    இதனிடையே, சிறுமியின் சடலத்தை பட்னாவா பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசியதில், அது கீழே விழாமல் ரயில் பாலத்தில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி நேஹாவின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததும், அவரது தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் அவரின் தாத்தா, பெரியப்பா உள்ளிட்ட 10 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Crime News, Uttar pradesh

    அடுத்த செய்தி