ஜம்மு ஜாஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட நிலையில், அதற்கு துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை கொண்ட ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேச அந்தஸ்து வரும் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், முதல் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இவர் குஜ்ராத்தின் முதல்வராக பிரதமர் மோடி இருந்த போது, அம்மாநில தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர்.
இதேபோல புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ராதா கிருஷ்ணா மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய ஆளுநர் சத்ய பால் மாலிக் கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கேரள மாநிலத்தின் பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.