பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறைக்குச் சென்றவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்!

மோடியின் ட்விட்டர் பிரசாரமான சௌகிதார் என்ற அடைமொழியை பெயருக்கு முன் சேர்திருந்தவர்கள் கூட கிரிராஜ் சிங்குக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.

news18
Updated: March 31, 2019, 5:29 PM IST
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறைக்குச் சென்றவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்!
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
news18
Updated: March 31, 2019, 5:29 PM IST
பீகார் சிறுமிகள் காப்பகத்தில் வசித்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறைக்குச் சென்ற மாநில அமைச்சருடன் இணைந்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பிரசாரத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாஃபர் நகர் பகுதியில் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வந்த சிறுமிகள் காப்பத்தில் வசித்த 40-க்கும் மேற்பட்ட சிறுமிகளில் 30-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது ஆய்வில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காப்பகத்துக்கு அம்மாநில சமூக நலத்துறை அமைச்சராக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. அந்தப் புகாரையடுத்து, அமைச்சர் பதவியை மஞ்சு வர்மா ராஜினாமா செய்தார்.

அதனடிப்படையில், மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகரின் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, அவர் வீட்டில் அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. அந்த விவகாரத்தில் மஞ்சு வர்மா மற்றும் அவரது கணவர் சந்திர சேகரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெகுசாரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி தான் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்தார்.

இந்தநிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பீகாரில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பிரச்சாரம் செய்த மேடையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறைக்குச் சென்ற மஞ்சு வர்மா அமர்ந்திருந்தார்.

Loading...
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. நெட்டீசன்கள் பலரும் மஞ்சு வர்மாவை மேடையில் ஏற்றியதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துவருகின்றனர்.

கறைபட்டவர்களை கட்சியிலிருந்து விலக்கிவையுங்கள் என்று கருத்து தெரிவித்துவருகின்றனர். மோடியின் ட்விட்டர் பிரசாரமான சௌகிதார் என்ற அடைமொழியை பெயருக்கு முன் சேர்திருந்தவர்கள் கூட கிரிராஜ் சிங்குக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.

பிரதமரை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி கிரிராஜ் சிங் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see:

First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...