ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை சொருகி வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகாரளித்த பெண் -  விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை சொருகி வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகாரளித்த பெண் -  விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

Ghaziabath | நிலத்தகராறில் தனது எதிர் தரப்பினரை சிக்க வைப்பதற்காக கூட்டு பாலியல் வன்கொடுமை நாடகமாடியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Delhi | Delhi

  தன்னை 5 பேர் கடத்தி 2 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகார் பொய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் காசியாபாத்திற்கு சென்ற போது 5 பேரால் கடத்தப்பட்டு 2 நாட்கள் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டதாக செய்திகள் பரவியது. மேலும், அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது விசாரணை மேற்கொண்டனர்.

  காவல்துறை

  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அந்த பெண் அளித்த புகார் பொய் என்பதையும், நிலத்தகராறு காரணமாக நிலத்தை அபகரிக்க எதிர்தரப்பினர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

  ALSO READ | சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே அடித்து ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி! : ஈரோடு அருகே நடந்த பகீர் சம்பவம்!

  இதனை தொடர்ந்து போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். வழக்கு திசை திரும்பியதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Ghaziabad S24p12, Rape, Rape case