தேசிய நெடுஞ்சாலையில் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமீப காலமாகவே பலருக்கும் ரீல்ஸ் வீடியோ படம்பிடித்து யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ அல்லது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவாக பதிவிடுவது பிடித்த செயலாக மாறியுள்ளது. ஆனால், ரீல்ஸ் எடுக்கிறேன் பேர்வழி என்று சிலர் இடம் பொருள் பார்க்காமல் சகட்டு மேனிக்கு மற்றவர்களை தொந்தரவு செய்யும் காரியங்களையும் அவ்வப்போது செய்வதுண்டு.
அப்படித்தான், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நபர் இரு பெண்களுடன் சேர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் ரீல்ஸ் வீடியோ செய்து காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் காசிபாத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு நபர் இரு பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். இவர் டிராபிக்கை பற்றி கவலைப்படாமல் ரோட்டை பிளாக் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ கடந்த 10ஆம் தேதி அன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது காவல்துறையின் கண்களிலும் தென்படவே, அந்த நபரை கண்டுபிடித்து காவல்துறை கைது செய்துள்ளது.
कल दि0 10.12.22 को सोशल मीडिया पर वायरल वीडियो जिसमे 1 युवक व 2 युवती अपनी कार से एलिवेटेड रोड पर सार्वजनिक मार्ग को अवरुद्व कर डांस कर रहे थे का संज्ञान लेते हुए थाना कौशांबी पर अभियोग पंजीकृत किया गया था, थाना कौशांबी पुलिस द्वारा युवक को गिरफ्तार कर उक्त कार को सीज किया गया है pic.twitter.com/6hohBJ4OoU
— GHAZIABAD POLICE (@ghaziabadpolice) December 11, 2022
அவருடன் நடனமாடிய இரு பெண்களையும் கைது செய்த காவல்துறை, அவரின் காரையும் பறிமுதல் செய்துள்ளது.மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மறைமுக எச்சரிக்கை தரும் விதமாக காசியாபாத் காவல்துறை அந்த நபர் சிறையில் இருக்கும் புகைப்படத்தையும் அவரது காரின் புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. ஆர்வம் முற்றிப்போய் பிறரை பற்றி கவலைப்படாமல் ஜாலிக்கு ஆசை ஆசையாக வீடியோ எடுத்து அந்த நபர் தற்போது சிறைவாசம் செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Man arrested, Police, Viral Video