காஜியாபாத்தில் நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த விக்ரம் ஜோசியின் உறவுக்கார பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விக்ரம் ஜோசி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு விக்ரம் ஜோசியை அவரது இரு மகள்கள் கண்முன்னே அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
இதுதொடர்பாக 9 பேரை கைதுசெய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த விக்ரம் ஜோசி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.